தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) அண்மையில் நிஃப்டி, பேங்க் நிஃப்டி,ஃபின்நிஃப்டி, நிஃப்டி நெக்ஸ்ட்50 மற்றும் நிஃப்டி மிட்கேப் செலக்ட் போன்ற இன்டெக்ஸ்களுக்கான F&O வாராந்திர காலாவதி தினத்தை தற்போதைய வியாழக்கிழமையிலிருந்து திங்கட்கிழமைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மேலும் தேசிய பங்குச் சந்தை கடந்த மார்ச் 4ம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில், இந்த மாற்றம் 2025 ஏப்ரல் 4ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்து இருந்தது. தேசிய பங்குச் சந்தை மட்டும் F&O காலாவதி தினத்தை மாற்றுவது சந்தை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதேசமயம், தேசிய பங்குச் சந்தையின் இந்த நடவடிக்கை பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்துக்கு (செபி) அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து செபி, வெளியிட்ட ஆலோசனை கட்டுரையில், பங்குச் சந்தை டெரிவேடிவ்ஸ் காலாவதி நாட்கள் அனைத்து சந்தைகளிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
செவ்வாய் அல்லது வியாழக்கிழமையாக மட்டுமே இருக்க வேண்டும். இது நிலையற்ற தன்மையை குறைத்து வர்த்தகர்களுக்கு சிறந்த முன்கணிப்புதன்மையை உறுதி செய்யும் நோக்கத்தை கொண்டுள்ளது. காலாவதி அட்டவணைகளில் இது போன்ற மாற்றங்களை செயல்படுத்துவதற்கு முன் சந்தைகள் எங்களிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று தேசிய பங்குச் சந்தைக்கு அறிவுரை வழங்கியது.
செபி மண்டையில் குட்டியதையடுத்து, தற்போது வாராந்திர காலாவதி தினத்தை மாற்றும் நடவடிக்கையை தேசிய பங்குச் சந்தை ஒத்திவைத்தது. இது குறுகிய காலத்தில் மும்பை பங்குச் சந்தைக்கு பலனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) நிறுவன பங்கின் மின்னல் வேகத்தில் உயர்ந்தது.
தேசிய பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே பிஎஸ்இ நிறுவன பங்கின் விலை சுமார் 15 சதவீதம் உயர்ந்து 5,386.15ஆக இருந்தது. பிஎஸ்இ பங்கு விலை உயர்வுக்கு மற்றொரு காரணமும் உள்ளது. பிஎஸ்இ நிறுவனம் போனஸ் பங்கு வெளியீடு உள்ள தகவல். தேசிய பங்குச் சந்தை அமைப்பிடம் பிஎஸ்இ தாக்கல் செய்த அறிக்கையில், 2025 மார்ச் 30ம் தேதியன்று நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டம் நடைபெற உள்ளது.
அந்த கூட்டத்தில், நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு போனஸ் பங்கு திட்டத்தனை பரிசீலித்து ஒப்புதல் அளிக்கும் என்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் பிஎஸ்இ பங்கு முதலீட்டாளர்களுக்கு 100 சதவீதத்துக்கு மேல் ஆதாயம் கொடுத்துள்ளது. கடந்த 6 மாதத்தில் இப்பங்கின் விலை 16.59 சதவீதம் வளர்ச்சி கண்டது.
கடந்த வாரம் இப்பங்கின் விலை 7.91 சதவீதம் அதிகரித்துள்ளது. அண்மையில் 2024-25ம் நிதியாண்டுக்கு பிஎஸ்இ தனது பங்குதாரர்களுக்கு ரூ.2 முகமதிப்புள்ள பங்கு ஒன்றுக்கு ரூ.15 டிவிடெண்ட் அறிவித்தது குறி்ப்பிடத்தக்கது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications