பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) - மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் டெலிகாம் சேவை நிறுவனம், இந்தியாவின் டெலிகாம் சேவை தளத்திற்கு அடித்தளமிட்டு யாரும் அசைக்க முடியாத இடத்தில் இருந்தது.
ஆனால் தனியார் நிறுவனங்கள் வருகை காரணமாகவும், புதிய தொழில்நுட்பத்தை எளிதாக பயன்படுத்தும் திறன் கொண்டு இருந்த காரணத்தாலும் BSNL கடந்த 15 வருடத்தில் மெல்ல மெல்ல அதன் ஆதிக்கத்தை இழந்து வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம், இந்திய கிராமங்களுக்கு பிராண்ட்பேன்ட் சேவை, அனைவருக்கும் மலிவு விலையில் இண்டர்நெட் சேவை என்ற பவ்வேறு முக்கிய இலக்குகளை இடைய BSNL முக்கிய கருவியாக மாறியுள்ளது. இதனால் சரிவிலும், நஷ்டத்திலும் இயங்கும் BSNL நிறுவனத்தை மீட்டுக்கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதில் முதல் படிக்கு தற்போது மத்திய அரசு பச்சை கொடி காட்டியுள்ளது.
இந்தியா முழுவதும் BSNL 4ஜி நெட்வொர்க்கை அறிமுகம் செய்வதற்காக சுமார் 1 லட்சம் தளங்களை பயன்படுத்த மத்திய அமைச்சர்கள் குழு (GOM) பச்சைக்கொடி காட்டி ஒப்புதல் அளித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை டாடா குழுமத்தின் தொழில்நுட்ப பிரிவான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) உடனான கூட்டணியில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் BSNL 4G நெட்வொர்க் விரிவாக்கம் செய்வதையும், நடைமுறைப்படுத்துவதையும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தலைமையில் செய்யப்படுகிறது. பிப்ரவரி மாதம் BSNL நிர்வாக குழு 1 லட்சம் 4ஜி தளத்தை வருடத்தின் இறுதிக்குள் தயார் நிலைக்கு கொண்டு வர முடிவு செய்தது. இதற்கான ஒப்புதலை தான் தற்போது மத்திய அமைச்சர்கள் குழு வழங்கியுள்ளது.
BSNL - TCS கூட்டணியில் BSNL 4G நெட்வொர்க்-கிற்கு தேவையான அனைத்து கருவிகளையும் சப்ளை செய்யும் பணி டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பொறுப்பு, இந்த நிலையில் 1 லட்சம் 4ஜி தளத்தை அமைப்பதற்கான செலவு என்பது 24,556.37 கோடி ரூபாய். இதில் நெட்வொர்க் கருவிகளின் விலை மட்டுமே 13000 கோடி ரூபாய், மீதமுள்ள தொகை அடுத்த 10 வருடத்திற்கான வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்த்திற்கானது.
பிஎஸ்என்எல் 4ஜி சேவையை மலிவான விலையில் இந்திய மக்களுக்கு கொடுத்தால் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் ஆகியவை அதிகளவிலான வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர் இழப்பை எதிர்கொள்ளும். தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவைக்கு மாறி வரும் வேளையில் 4ஜி சேவையில் பெரிய பாதிப்பு இருக்காது என நினைப்பர்களுக்கு கட்டாயம் BSNL பெரிய அதிர்ச்சி கொடுக்கும்.

ஜூலை 27 அன்று, பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி (CCEA) BSNL நிறுவனத்தை மீட்டெடுக்கச் சுமார் 1.64 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவி திட்டத்தை அறிவித்து இருந்தது. இந்தத் தொகையை வைத்துத் தற்போது இருக்கும் சேவையை மேம்படுத்தவது மட்டும் அல்லாமல் 4ஜி, 5ஜி, அதிவேக பிராண்ட்பேன்ட் போன்ற புதிய திட்டத்தை உருவாக்கவும், தேவையான இடங்களில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவிப்புகள் வெளியானது.
இந்தியாவில் 4ஜி நெட்வொர்க் அறிமுகம் செய்ய டிசிஎஸ் மற்றும் அரசு அமைப்பான C-DOT உடன் இணைந்து 4ஜி தொழில்நுட்பத்தையும், டிசிஎஸ் - அரசு அமைப்பான ITI உடன் இணைந்து 4ஜி நெட்வொர்க்கிற்குத் தேவையான டெலிகாம் கருவிகளைத் தயாரிக்க உள்ளது.
மத்திய அரசின் Centre for Development of Telematics (C-DoT) அமைப்பு டிசிஎஸ் உடன் இணைந்து கோர் 4ஜி சொல்யூஷன்-ஐ சொந்தமாகத் தயாரித்துள்ளது. இதை அடிப்படையாக வைத்து தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 4ஜி சேவை அளிக்கப்பட உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications