நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசை அளித்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிக நன்மைகளை வழங்கும் வகையில் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சவால் அளிக்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் பல அசத்தல் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் அதன் ரீசார்ஜ் கட்டணங்களை கடந்த ஜூலை மாதத்தில் உயர்த்திய நிலையில், பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணங்களை குறைத்து அதிக வாடிக்கையாளர்களை தன்வசம் இழுத்து கொண்டது. இந்த நிலையில், சமீப காலமாக பல்வேறு சலுகைகளையும் அதன் வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது.

இதனால் பல்வேறு வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் பக்கம் சாய்ந்து வருகின்றனர். பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி நெட்வொர்கை விரிவுபடுத்துதல் மற்றும் 5ஜி சேவைகளை அறிமுகம் தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுத்து வரும் அதே நேரத்தில், புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதிலும் நிறுவனம் தீவிரமாக உள்ளது.
தற்போது மலிவான திட்டங்கள் உள்ளன. மக்கள் ஆர்வம் காட்டியதால், பிஎஸ்என்எல் 5ஜி சேவைகளை விரைவில் தொடங்குவதற்கான ஆயத்தங்களை தீவிரப்படுத்தியது. தற்போது பிஎஸ்என்எல் புத்தாண்டு சலுகையை கொண்டு வந்துள்ளது.
பிஎஸ்என்எல் ரூ 277 திட்டம்: பிஎஸ்என்எல் நிறுவனம் பண்டிகை கால சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய திட்டத்திற்கான கட்டணம் ரூ.277 ஆகும். இதில் வாடிக்கையாளர்கள் 60 நாட்கள் வேலிடிட்டியுடன் 120ஜிபி டேட்டா கிடைக்கும். அதாவது தினமும் 2ஜிபி டேட்டா உடன் இந்த ஆஃபர் ஜனவரி 16 வரை மட்டுமே செல்லுபடியாகும் என பிஎஸ்என்எல் தகவல் X தளத்தில் பதிவிட்டு தகவலைப் பகிர்ந்துள்ளது.
2025 ஆண்டில் பிஎஸ்என்எல் 5ஜி சேவை: 2025 ஆம் ஆண்டில் பிஎஸ்என்எல் அதன் 5ஜி சேவை தொடங்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை என்று டிசிஎஸ் தலைமை இயக்க அதிகாரி என்.கணபதி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்தியாவின் தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மே 2025 க்குள் ஒரு லட்சம் இடங்களில் 4ஜி நெட்வொர்க்கை பிஎஸ்என்எல் தொடங்கும் என்று கூறியிருந்தார். இதற்குப் பிறகு, ஜூன் 2025 இல் 5ஜி நெட்வொர்க் தொடங்கும் என்று கூறியிருந்தார்.
பிஎஸ்என்எல்லின் 5ஜி சேவைகள் சரியான நேரத்தில் தொடங்கும் என்று டிசிஎஸ் உறுதி செய்துள்ளது. அதிவேக இணையத்திற்காக காத்திருந்த மில்லியன் கணக்கான பிஎஸ்என்எல் பயனர்களுக்கு இது பெரும் நிம்மதியை அளித்துள்ளது. திட்டமிட்டபடி பணிகள் நடந்து வருவதாகவும், குறித்த காலத்துக்குள் அனைத்து பணிகளும் முடிவடையும் என்றும் டிசிஎஸ் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு கடும் சவாலை கொடுக்கும் வகையில், சமீபத்தில், பிஎஸ்என்எல் ஆனது IFTV (Intranet Fiber TV) சேவையைத் தொடங்கியது. அத்துடன் BiTV சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த இரண்டு திட்டங்களிலும் நீங்கள் 300க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்களை முற்றிலும் இலவசமாகப் பார்க்கலாம்.
தொலைத்தொடர்பு துறையில் பிஎஸ்என்எல்லின் நுகர்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) டிசம்பர் 23ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், பிஎஸ்என்எல் கடந்த அக்டோபர் மாதத்தில் 5 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைச் சேர்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
2024 நிதியாண்டில் பிஎஸ்என்எல் வருவாய் ரூ. 21,302 கோடி ஆகும். கடந்த ஆண்டை விட சற்று அதிகரித்துள்ளது. இந்த அமைப்பில் 30,000 க்கும் மேற்பட்ட நிர்வாகமற்ற மற்றும் 25,000 நிர்வாக ஊழியர்கள் உள்ளனர். மொத்தம் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். இதில், 18,000-19,000 வேலைகளை குறைக்க நிறுவனம் முயற்சித்து வருகிறது.
இதற்கிடையில், டெலிகாம் நிறுவனங்கள் கட்டணங்களை கடுமையாக உயர்த்தியதால் ஜியோ மற்றும் ஏர்டெல் பயனர்கள் பிஎஸ்என்எல் பக்கம் திரும்பி உள்ளனர். ரீசார்ஜ் திட்டங்களின் விலை குறைவாக இருப்பதால், மக்கள் அதன் பக்கம் திரும்புகின்றனர். ஆனால் பிஎஸ்என்எல் இன்னும் முழு அளவிலான 4ஜி சேவைகளை கொண்டு வரவில்லை. ஆனாலும், 5ஜி சேவையும் தொடங்கப்பட உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications