இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமாக இருந்த மத்திய அரசின் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனத்தை மீட்டு எடுக்க சுமார் 89,047 கோடி மதிப்பிலான மீட்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று சிஎன்பிசி-டிவி18 தெரிவித்துள்ளது.
இந்தியாவில் டெலிபோன், பிராட்பேன்ட் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் மலிவான விலையில் கொடுத்து பெரிய அளவிலான புரட்சியை செய்த BSNL நிறுவனம் தனியார் நிறுவனங்களின் வருகை மட்டும் அல்லாமல் அதன் ஆதிக்கத்தாலும் படிப்படியாக வர்த்தகம், வருவாயை இழந்து நிற்கிறது.

இந்த நிலையில் கடந்த 4 வருடமாக BSNL) நிறுவனத்தை மீட்டு எடுக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மத்திய அமைச்சரவை BSNL நிறுவனத்தை மீட்டு எடுக்க சுமார் 89,047 கோடி ரூபாய் மதிப்பிலான மீட்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பிஎஸ்என்எல் தற்போது மோசமான டெலிகாம் உள்கட்டமைப்புடன் போராடி வரும் வேவையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை 5ஜி சேவைக்கு சென்று வருகிறது. தனியார் டெலிகாம் நிறுவனத்தின் ஆதிக்கத்தால் பிஎஸ்என்எல் வயர்லெஸ் பிரிவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவை BSNL நிறுவனத்தை மீட்டு எடுக்க சுமார் 89,047 கோடி மதிப்பிலான மீட்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் செய்தி வெளியான பின்பு மற்றொரு அரசு டெலிகாம் சேவை நிறுவனமான MTNL எனப்படும் மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் பங்குகள் கிட்டத்தட்ட 12% உயர்ந்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தை போலவே MTNL நிறுவனமும் அதிகப்படியான கடனில் மூழ்கியிருக்கும் வேளையில் இந்நிறுவனத்தை மூடுவது குறித்த செய்து இன்று காலை வெளியானது. முதலில் இரு நிறுவனங்களையும் இணைக்கும் திட்டம் கையில் எடுக்கப்பட்ட நிலையில் பல வருட போராட்டத்திற்கு பின்பு மத்திய அரசு கைவிட்டது.
இதை தொடர்ந்து மத்திய அரசு MTNL நிறுவனத்தை மொத்தமாக மூடிவிட்டு மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிடெட் (எம்டிஎன்எல்) ஊழியர்கள் மற்றும் செயல்பாடுகளை BSNL க்கு மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான உறுதியான ஒப்பந்தம் இதுவரையில் வெளியாகவில்லை.
மே மாதம் BSNL நிறுவனம் தனது 4ஜி நெட்வொர்க்கை அறிமுகம் செய்வதற்காக சுமார் 1 லட்சம் தளங்களை பயன்படுத்த மத்திய அமைச்சர்கள் குழு (GOM) பச்சைக்கொடி காட்டி ஒப்புதல் அளித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை டாடா குழுமத்தின் தொழில்நுட்ப பிரிவான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) உடனான கூட்டணியில் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும் BSNL - Cinemaplus என்னும் புதிய OTT தளத்திற்கான சப்ஸ்கிரிப்ஷன் பேக்குகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை தேர்வு செய்த சப்ஸ்கிரிப்ஷன் பேக்குகளை வாங்கி பார்க்க முடியும். ஏற்கனவே OTT பிரிவில் ஜியோ சினிமா வந்தது Netflix, Amazon prime, disney Hotstar-க்கு பெரும் தலைவலியாக இருக்கும் வேளையில் தற்போது BSNL-ம் களத்தில் இறங்கியுள்ளது.
BSNL நிறுவனம் சினிமாப்ளஸ் OTT சேவைகளின் வெவ்வேறு இணைப்புகள் அடங்கிய மூன்று திட்டங்களை வழங்குகிறது. இதில் அடிப்படைத் திட்டம் 49 ரூபாயில் தொடங்கி 249 ரூபாய் வரை செல்கிறது.


Click it and Unblock the Notifications