டெல்லி: அரசின் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் தங்களுடைய 4ஜி சிம் கார்டுகளை ஏடிஎம் போன்ற வென்டிங் இயந்திரங்கள் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. எனவே 4ஜி சிம்மிற்காக வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு வரவேண்டிய தேவை இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொலைதொடர்பு சேவை துறையில் தனியாரின் ஆதிக்கம் வலுவாக இருக்கிறது. குறிப்பாக முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ நிறுவனம் தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே இந்தியாவின் நம்பர் ஒன் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமாக மாறிவிட்டது.

இந்த பட்டியலில் ஏர்டெல் நிறுவனம் இரண்டாவதாக இருக்கிறது. இந்த நிலையில் தனியார் நிறுவனங்களுக்கு நிகராக சேவை வழங்க வேண்டும் என்பதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் பெருமளவில் தன்னை மேம்படுத்தி வருகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்கள் தங்களுடைய 4ஜி சிம்களை பெறுவதற்காக பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு வரவேண்டிய தேவை இல்லை என தெரிவித்துள்ளது. இதற்காக ஏடிஎம் போன்ற தானாகவே சிம் கார்டுகளை வழங்கக்கூடிய இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பிஎஸ்என்எல் செல்ஃப் கேர் செயலி (BSNL Self Care app) வாயிலாக புதிய சிம் கார்டினை பெறுவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளலாம்.
சிம் வென்டிங் இயந்திரங்கள் வாயிலாக இந்த செயலியை பயன்படுத்தி எளிதாக 4ஜி சிம்கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் டெல்லியில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிம் வென்டிங் இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இவை அதிகமாக மக்கள் வந்து செல்லக்கூடிய இடங்களில் பொருத்தப்படும் என்றும் வாடிக்கையாளர்கள் இவற்றின் வாயிலாக புதிய சிம் கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம் எந்திரங்களை போலவே இதுவும் 24 மணி நேரமும் செயல்படும் என பிஎஸ்என்எல் நிறுவனம் கூறியுள்ளது. ரயில்வே நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்த வெண்டிங் இயந்திரங்கள் வைக்கப்பட இருக்கின்றன. பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்குவதற்காகவும் சில இடங்களில் 5ஜி தொழில்நுட்பத்தை சோதனை அடிப்படையில் வழங்குவதற்காகவும் தயாராகி வருகிறது.
அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவையை வழங்கும் என ஏற்கனவே அறிவித்துள்ளது. அண்மையில் டெல்லியில் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களையும் அறிமுகம் செய்தது காட்சிப்படுத்தியது.
குறிப்பாக ஸ்பேம் கால்களை கண்டறிந்து அவற்றை தடுப்பது உள்ளிட்டவற்றில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த இருப்பதாக பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூடிய விரைவில் 1 லட்சம் மொபைல் டவர்களை 4ஜி சேவை வழங்கக் கூடிய வகையில் அப்கிரேட் செய்வதற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications