இந்திய அரசுக்கு சொந்தமான டெலிகாம் சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்காக சினிமாப்ளஸ் என்ற புதிய ஓவர்-தி-டாப் அதாவது OTT சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது.
BSNL கடந்த ஒரு வருடமாகவே பல முக்கிய திட்டங்களையும், முதலீடுகளையும் அறிவித்து வருகிறது. 4ஜி சேவை அறிமுகம் செய்ய டிசிஎஸ் உடன் கைகோர்த்த நாளில் இருந்து பிஎஸ்என்எல் பல முக்கிய திட்டங்களில் பணியாற்ற துவங்கியுள்ளது.

இந்திய அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான BSNL - Cinemaplus என்னும் புதிய OTT தளத்திற்கான சப்ஸ்கிரிப்ஷன் பேக்குகளை அறிவித்துள்ளதாக TelecomTalk தெரிவித்துள்ளது.
இதன் மூலம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை தேர்வு செய்து சப்ஸ்கிரிப்ஷன் பேக்குகளை வாங்கி பார்க்க முடியும். ஏற்கனவே OTT பிரிவில் ஜியோ சினிமா வந்தது Netflix, Amazon prime, disney Hotstar-க்கு பெரும் தலைவலியாக இருக்கும் வேளையில் தற்போது BSNL-ம் களத்தில் இறங்கியுள்ளது.
OTT சேவைக்காக மத்திய அரசின் BSNL தற்போது Lionsgate, ShemarooMe, Hungama மற்றும் EpicOn உள்ளிட்ட பல OTT தளங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. BSNL Cinemaplus OTT என்டர்டெயின்மென்ட் பேக்குகளின் விபரத்தை இனி பார்ப்போம்.
BSNL Cinemaplus என்பது முன்பு YuppTV ஸ்கோப்பின் புதிய வடிவம் மட்டுமே. இந்த நிலையில் BSNL Cinemaplus வாடிக்கையாளர்கள் 249 ரூபாய் திட்டத்தில் வழங்குகிறது BSNL. சினிமாபிளஸ் பயனர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப தேர்வு செய்ய பலவிதமான திட்டங்களை வழங்குகிறது.
BSNL நிறுவனம் சினிமாப்ளஸ் OTT சேவைகளின் வெவ்வேறு இணைப்புகள் அடங்கிய மூன்று திட்டங்களை வழங்குகிறது. இதில் அடிப்படைத் திட்டம் 49 ரூபாயில் தொடங்கி 249 ரூபாய் வரை செல்கிறது. அனைத்துத் திட்டங்களின் முழு விபரத்தையும் இப்போது பார்ப்போம்.
BSNL Cinemaplus starter pack: வெறும் ரூ.49 கட்டணம் கொண்ட இந்த அடிப்படைத் திட்டங்கள் ShemarooMe, Hungama, Lionsgate மற்றும் EpicOn ஆகியவற்றின் கன்டென்ட்-களை வழங்குகின்றன. இந்த திட்டம் முன்பு ரூ.99 ஆக இருந்தது.
BSNL Cinemaplus full pack: சினிமாபிளஸ் முழு பேக்கில் Zee4 பிரீமியம், SonyLiv பிரீமியம் YuppTV மற்றும் Hotstar ஆகியவை அடங்கும். திட்டத்தின் விலை 199 ரூபாய்.

BSNL Cinemaplus premium pack: இந்த பிரீமியம் பேக்-ன் கட்டணம் 249 ரூபாய். இதில் Zee5 பிரீமியம், SonyLiv பிரீமியம், YuppTV, ShemarooMe, Hungama, Lionsgate மற்றும் Hotstar ஆகியவற்றின கன்டென்ட் பார்க்க முடியும்.
சினிமாபிளஸ் சேவை எவ்வாறு செயல்படுகிறது: சினிமாப்ளஸைப் பயன்படுத்த, BSNL ஃபைபர் இணைப்பைப் பெற்றிருக்க வேண்டும். இதன் பின்பு மொபைல் எண் வாயிலாக உள்நுழைந்து தேவைக்கு ஏற்ப சப்ஸ்கிரிப்ஷன் பேக்குகளை தேர்வு செய்து காணலாம். மேலும் மொபைல், டேப், போன் என அனைத்து தளத்திலும் செயலி கொண்டு வீடியோக்களை பார்க்கலாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications