அரசுக்கு சொந்தமான தொலைதொடர்பு சேவை நிறுவனம், பிஎஸ்என்எல். இதன் அதிகாரிகளுள் ஒருவர் பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். பி.எஸ்.என்.எல் இயக்குநர் (CFA) விவேக் பன்சால், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்க்கு மேற்கொள்ளவிருந்த பயணம் தொடர்பாக செய்யப்படும் ஏற்பாடுகள் தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 25 மற்றும் 26 தேதிகளில் பிரயாக்ராஜ்க்கு பன்சால் மேற்கொள்ளவிருந்த பயணம் குறித்து விரிவாக விவரிக்கும் உள் அலுவலக உத்தரவு சமூக வலைதளங்களில் பரவி விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அவரது இரண்டு நாள் நிகழ்ச்சியை நிர்வகிக்க சுமார் 50 அதிகாரிகள் கிட்டத்தட்ட 20 தனித்தனி பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டிருந்ததை அம்பலப்படுத்தியது இந்த ஆவணம். இந்த நிகழ்ச்சி நிரலில் அதிகாரப்பூர்வ கூட்டங்கள், கோயில் வருகைகள் மற்றும் சங்கமத்தில் ஒரு சடங்கு ரீதியான புனித நீராடல், அத்துடன் போக்குவரத்து மற்றும் ஏற்பாடுகள் ஆகியவை அடங்கும்.

இந்த சர்ச்சைக்கு முக்கிய காரணமாக அமைந்த ஒரு தகவல்,குளியல் தொகுப்பு பற்றிய குறிப்பு ஆகும். இதில் துண்டு, உள்ளாடைகள், செருப்புகள் , சீப்பு, கண்ணாடி, சோப்பு, ஷாம்பூ மற்றும் எண்ணெய் ஆகியவை அடங்கும். இந்த உத்தரவில் ஆறு ஆண்களுக்கான தொகுப்புகளும், இரண்டு பெண்களுக்கான தொகுப்புகளும் குறிப்பிடப்பட்டிருந்தன.
விருந்தோம்பல் சரிபார்ப்புப் பட்டியல் அதற்கும் அப்பால் விரிவாக இருந்தது. உலர் பழங்கள், துண்டுகள், பல் துலக்கும் பிரஷ்கள், பற்பசை மற்றும் செருப்புகள் ஆகியவற்றை ஹோட்டல் மற்றும் சர்க்யூட் ஹவுஸில் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது.
போக்குவரத்துத் திட்டங்களில் இரண்டு வெள்ளை இனோவா கிறிஸ்டா வாகனங்கள், புதிய துண்டுகளுடன் குறிப்பிடப்பட்டிருந்தன. மேலும், CTO கட்டிடம் மற்றும் வளாகத்தைச் சுத்தம் செய்து அலங்கரிக்கவும், வழித்தடத்தில் சுண்ணாம்பு தூவி, விளக்குகள் மற்றும் மின் விசிறிகள் அமைக்கவும், பூங்கொத்துகள், நினைவுப் பரிசுகள், பெயர் பலகைகள், கோப்புகள், மேசை விரிப்புகள், பாத்திரங்கள், நாற்காலிகள், ஒலி அமைப்புகள் மற்றும் கூட்டங்களுக்கான சிற்றுண்டிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்யுமாறும் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வாகனப் பயணத்திற்கான தொகுப்புகளும் பட்டியலிடப்பட்டிருந்தன. அவற்றில் தண்ணீர் பாட்டில்கள், சாக்லேட்டுகள், சிப்ஸ், பழச்சாறு, கண்ணாடிகள் மற்றும் கைக்குட்டைகள் ஆகியவை அடங்கும். குறிப்பிட்ட படித்துறையில் பொதுப் பயன்பாட்டிற்காக ஒரு படுக்கை விரிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விரிவான ஏற்பாடுகளின் ஸ்கிரீன் ஷாட்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி, கடும் எதிர்வினைகளைத் தூண்டின.
இதைத் தொடர்ந்து, அரசு தரப்பில் முறையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் " ஏற்றுக்கொள்ள முடியாதது, மிகவும் கண்டிக்கத்தக்கது" என்று உயர் அரசு வட்டாரங்கள் விவரித்துள்ளதோடு, பன்சாலுக்குக் காரணம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்தியுள்ளன. ஏழு நாட்களுக்குள் தனது விளக்கத்தைச் சமர்ப்பிக்குமாறு பன்சால் பணிக்கப்பட்டுள்ளார். அதன் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இதை எளிதாக விடப்போவதில்லை" என்று அரசு வட்டாரங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் குறித்து மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா கூறுகையில், "இது முறையற்றது மற்றும் நிறுவப்பட்ட விதிகள், மரபுகளின் மீறல் என்பதை நான் மிகத் தெளிவாகக் கூறியுள்ளேன். இது எனக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது. இது அதிர்ச்சியளிக்கிறது. இயக்குநருக்கு ஏற்கெனவே ஏழு நாட்கள் கால அவகாசத்துடன் விளக்கமளிக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுவிட்டது. நாங்கள் தகுந்த நடவடிக்கை எடுப்போம்" என்று உறுதிப்படுத்தினார்.
இந்த சர்ச்சை குறித்து பி.எஸ்.என்.எல் இந்தியா, பிப்ரவரி 21 அன்று 'எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டது. அதில், "அதிகாரப்பூர்வ வருகைகள் எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பது குறித்து பி.எஸ்.என்.எல் நிரந்தர வழிமுறைகளைக் கொண்டுள்ளது. விதிமீறல் சம்பவம் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. கவனத்தில் கொள்ளப்பட்ட நிகழ்வு பி.எஸ்.என்.எல்-இன் தரங்கள் மற்றும் மதிப்புகளுக்கு இணங்கவில்லை." என்று குறிப்பிட்டது.
மேலும், "தொடர்புடையவர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள வழிமுறைகளை கண்டிப்புடன் கடைபிடிக்குமாறு மீண்டும் வலியுறுத்தி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் இது தொடர்பாக வகுக்கப்பட்ட நடத்தை விதிகள் மற்றும் வழிமுறைகளை கண்டிப்புடன் கடைபிடிக்குமாறு நினைவூட்டப்படுகிறார்கள்" என்று அந்தப் பதிவு கூறியது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications