கடந்தாண்டு ஜூலை மாதம் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டண உயர்வை அறிவித்தன. இதன் காரணமாக பலரும் எந்தவித ரீசார்ஜ் கட்டண உயர்வையும் அறிவிக்காத BSNL ஆப்பரேட்டருக்கு மாறுபவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரிக்கத் தொடங்கியது. அதற்கு ஏற்ப BSNL தங்களுடைய சேவையை அதிகரிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. நீங்களும் பிஎஸ்என்எல் ஆப்பரேட்டருக்கு மாற வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாலோ அல்லது உங்களுக்கு ஒரு ஃபேன்சி நம்பர்/விஐபி நம்பரை வாங்க விரும்பினாலோ கீழ்காணும் விஷயங்களை பின்பற்றி வாங்கிக் கொள்ளலாம்.
பேன்சி நம்பரை வழங்க BSNL "சூஸ் யுவர் மொபைல் நம்பர்" என்ற சேவையை வழங்கி வருகிறது. இதற்கு முன்னர் பேன்சி நம்பர்களை பெறுவதற்கு சில நிபந்தனைகள் இருந்தது. இப்போது இந்த வசதி அனைவருக்கும் கிடைக்கிறது. பேன்சி நம்பரை ஆன்லைனில் பெறுவதற்கு சில வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

BSNL ஆப்ரேட்டரிடம் இருந்து பேன்சி நம்பரை பெறுவது எப்படி?:
ஸ்டெப் 1: முதலில் என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
ஸ்டெப் 2: உங்களுடைய பகுதியை தேர்ந்தெடுத்து, சேவையை பெற விரும்பும் இடத்தை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு அனைத்து எண்களும் இருக்கும் ஒரு அட்டவணை காண்பிக்கப்படும். அதில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
ஸ்டெப் 3: பேன்சி நம்பரைப் பெற விரும்பினால் இரண்டாவது ஆப்ஷன் ஒன்று காண்பிக்கப்படும். அங்கு ஃபேன்சி நம்பரை தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் பெற விரும்பும் நம்பரை தேர்ந்தெடுக்க சில பல ஆப்ஷன்கள் காண்பிக்கப்படும். உதாரணமாக தொடர் எண்கள், தொடக்க எண், முடிவு எண் என தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நீங்கள் விரும்பும் நம்பரை தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்யும் ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஸ்டெப் 4: அதன் பிறகு உங்கள் மொபைல் நம்பரை வழங்கி மெசேஜ் மூலம் பின் நம்பரை பெற வேண்டும். பின்னர் வாடிக்கையாளர் சேவை அல்லது கிளையைத் தொடர்பு கொள்ள வேண்டும். இந்த செயல்முறை முடிந்ததும் பேன்சி நம்பருக்கான பணம் செலுத்தி அனைத்து செயல்முறையையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
பேன்சி நம்பரை பொறுத்தவரையில் ஒரு பயனர் ஒரு நம்பரை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். இரண்டாவதாக நீங்கள் நம்பரை தேர்ந்தெடுக்கும் போதே பணம் செலுத்தியாக வேண்டும். பிஎஸ்என்எல் மட்டுமின்றி வோடபோன் ஐடியா, ஏர்டெல், ஜியோ போன்ற ஆப்பரேட்டர்களும் ஃபேன்ஸி நம்பர்களை வழங்குகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications