அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு ஆபரேட்டரான BSNL, தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு 4ஜி சேவைகளை வழங்கத் தொடங்கியுள்ளது. இந்த 4G சேவை மூலம், வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்வது, ஆன்லைன் கேமிங் விளையாடுவது மற்றும் வீடியோ கான்ஃபரன்சிங் போன்ற செயல்களை மிக எளிதாகச் செய்ய முடியும். முதற்கட்டமாக நொச்சிலி, கொளத்தூர், பள்ளிப்பேட்டை, திருவெள்ளவயல், பொன்னேரி உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட இடங்களுக்கு 4G சேவையை வழங்க கவனம் செலுத்தி வருகிறது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அடுத்த கட்டமாக BSNL 4G சேவை வழங்கப்படும் என்று BSNL அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களும் விரைவில் BSNL 4G சேவையைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விரிவாக்கம், "மேக் இன் இந்தியா" திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்படவுள்ளது.

சென்னையில் புதிய வாடிக்கையாளர்களுக்கு இலவச சிம் கார்டுகள் வழங்கப்படும் என்றும், இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 4G சிம்மிற்கு மேம்படுத்தும் வசதியையும் BSNL வழங்குகிறது. இந்த சலுகை செப்டம்பர் 30, 2024 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம், கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட இன்டர்நெட் வழங்கப்படுவதை BSNL நோக்கமாகக் கொண்டுள்ளது. BSNL 4G சேவையின் காரணமாக வாடிக்கையாளர்கள் இனி வேகமான மற்றும் தடையற்ற இன்டர்நெட்டை பெற முடியும். மேலும் BSNL 4G சேவை விரைவில் சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்ந்து டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டண உயர்வை அறிவித்துள்ளன. அந்த வகையில் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய டெலிகாம் நிறுவனங்கள் ஜூன் 3-ஆம் தேதி அன்றும், ஜூன் 4-ஆம் தேதி அன்றும் அடுத்தடுத்து கட்டண உயர்வை அறிவித்தன. அதன் விளைவாக பல ரீசார்ஜ் திட்டங்கள் காலாவதி ஆகி உள்ளன. மேலும் புதிய ரீசார்ஜ் திட்டங்களில் ரூ. 20 முதல் ரூ. 25 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பழைய ரீசார்ஜ் திட்டங்களை விட தற்போதைய ரீசார்ஜ் திட்டங்கள் சற்று அதிகரித்துள்ளன. இந்த நேரத்தில் BSNL 4G சேவை-இன் விரிவாக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சிறந்த முறையில் அனைத்து பகுதிகளுக்கும் 4ஜி சேவை வழங்கப்பட்டு ரீசார்ஜ் கட்டணங்களும் சீராக இருந்தால் மக்களின் அலை BSNL பக்கம் திரும்புமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications