சென்னை: ரிலையன்ஸ் மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுடைய ப்ரீபெய்டு பிளான் கட்டணங்களை கணிசமான அளவு உயர்த்தியுள்ளன. இதனை அடுத்து பெரும்பாலானவர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த 20 நாட்களில் மட்டும் சுமார் 80,000க்கும் அதிகமானவர்கள் பிஎஸ்என்எல் இணைப்புகளை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் தற்போது ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் முன்னணி தொலைதொடர்பு சேவை நிறுவனங்களாக இருக்கின்றன. கடந்த ஜூலை 3ஆம் தேதி ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய ப்ரீபெய்ட் கட்டணங்களை 25% வரை உயர்த்தின. இதனால் அதிருப்தி அடைந்துள்ள வாடிக்கையாளர்கள் குறைந்த ப்ரீபெய்டு கட்டணங்களை கொண்ட பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறி வருகின்றனர்.

தமிழகத்தின் பெரும்பாலான பிஎஸ்என்எல் தலைமை அலுவலகங்களில் புதிய இணைப்பினை பெறுவதற்காக ஏராளமானவர்கள் வருகை தருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தாங்கள் ஏற்கனவே பயன்படுத்தும் மொபைல் எண்களை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு போர்ட் செய்வது, செயல்படாமல் இருக்கக்கூடிய பழைய பிஎஸ்என்எல் எண்களை மறுபடியும் ஆக்டிவேட் செய்வது ஆகியவற்றுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான மக்கள் பிஎஸ்என்எல் அலுவலகங்களை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
திருச்சியில் மட்டும் கடந்த ஜூலை 30ஆம் தேதி நிலவரப்படி 16500 பேர் புதிதாக பிஎஸ்என்எல் இணைப்பினை பெற்றுள்ளார்களாம். இது கடந்த மாதங்களை விட அதிகமாகும். அதே போல பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனங்களுக்கு மாறிவரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் 6.29 % இல் இருந்து 0.4% என குறைந்திருப்பதாக பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதே போல மதுரை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களிலும் கடந்த ஜூலை மாதத்தில் புதிதாக 17,000 பேர் பிஎஸ்என்எல் இணைப்பினை பெற்றுள்ளனர். கோயம்புத்தூரில் சுமார் 12,000 பேர், சென்னையில் 40,000 பேர் என கடந்த 20 நாட்களில் மாநிலம் முழுவதும் 80,000க்கும் அதிகமானவர்கள் பிஎஸ்என்எல் இணைப்பினை பெற்றுள்ளனர்.
தற்போதைக்கு தங்களுடைய ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தும் எண்ணம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ள பிஎஸ்என்எல் அதிகாரிகள், தொழிலை விரிவுபடுத்துவதே நோக்கம் எனக் கூறியுள்ளனர். வரும் டிசம்பர் மாதத்திற்குள் தங்களுடைய திட்டங்கள் அனைத்தும் 4ஜி அப்கிரேட் பெறும் என்றும் மார்ச் மாதத்திற்குள் 5ஜி அப்கிரேடை பெற்று விடும் என்றும் கூறுகின்றனர். கூடுதலாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டவர்களை அமைக்க இருப்பதாக தெரிவிக்கின்றனர். சென்னையில் மட்டும் 300 டவர்கள் அமைக்க போவதாகவும் மற்ற மாவட்டங்களில் 2,100 டவர்கள் அமைக்கப் போவதாகவும் கூறுகின்றனர்.
இதனிடையே ஜியோவில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா பெறுவதற்கு 28 நாள் திட்டத்திற்கு 349 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும், ஆனால் பிஎஸ்என்எல் இதே சலுகைகளை வெறும் 199 ரூபாய்க்கு வழங்குகிறது என பயனாளர்கள் கூறுகின்றனர். ஏர்டெல்லில் இருந்து பிஎஸ்என்எல்-க்கு மாறியுள்ள மற்றொரு வாடிக்கையாளர் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா பேக்கினை பெறுவதற்கு ஏர்டெல் 84 நாட்களுக்கு 859 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் அதே பிஎஸ்என்எல்-ல் வெறும் 499 ரூபாய் தான் எனக் கூறியுள்ளார்.
இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு பிஎஸ்என்எல் நெட்வொர்க் குவாலிட்டி என்பது தான் கவலையாக இருக்கிறது இருந்தாலும் வரும் நாட்களில் அது மேம்படும் என்ற நம்பிக்கையை முன் வைக்கின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications