டெல்லி: இந்தியாவில் தொலைதொடர்பு சேவை பிரிவில் செயல்பட்டு வரக்கூடிய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் 5g சேவைகளை சோதனை செய்ய தொடங்கியுள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட இந்த 5ஜி தொழில்நுட்பமானது பிஎஸ்என்எல் சார்பாக டெல்லியில் முக்கியமான பகுதிகளில் பரிசோதனை செய்யப்படுகிறது.
டெல்லியின் நேரு பிளேஸ், சாணக்கியபுரி மற்றும் மின்டோசாலை பகுதிகளில் பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவைகளை சோதனை செய்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது தொலைதொடர்பு சேவையில் தனியார் நிறுவனங்களே கோலோச்சுகின்றன. குறிப்பாக ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் தான் பெரும்பாலான தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குகின்றன. இந்த துறையில் அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் போட்டியிடுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொலை தொடர்பு இணைப்பை மேம்படுத்துவது 5ஜி சேவைகளை வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை பிஎஸ்என்எல் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் மற்றும் இணையத்தை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் 5ஜி சேவைகளை வழங்குவது கட்டாயமாகிவிட்டது. இந்த நிலையில் தான் பிஎஸ்என்எல் நிறுவனம் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு டெல்லியின் முக்கிய பகுதிகளில் 5ஜி சேவைகளை பரிசோதனை செய்து வருகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தை பொருத்தவரை தங்களுடைய உள்கட்டமைப்புகளை வேகமாக மேம்படுத்தி வருகிறது. அண்மையில் இந்த நிறுவனம் தங்களுடைய New Generation Over-the-Air (OTA) மற்றும் Universal SIM (USIM) தளங்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு இருப்பிட நிபந்தனைகளும் இல்லாமல் சிம் கார்டுகளை மாற்றம் செய்யாமல் அப்படியே நம்பரை மற்றும் மாற்றிக் கொண்டு பயன்படுத்தும் வசதி இதில் வழங்கப்படுகிறது.
நாடு முழுவதும் தங்களுடைய நெட்வொர்க்கை வலுப்படுத்துவதற்கான பணிகளை பிஎஸ்என்எல் நிறுவனம் வேகப்படுத்தி வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் மார்ச் 2025க்குள் 100000 டவர்களை அமைப்பதற்கு முடிவு செய்துள்ளது. அக்டோபர் மாதத்திற்குள் 80,000 டவர்களை அமைக்கும் பணி முடிவடையும் என தெரிவித்துள்ளது.
எனவே இதன் மூலம் நாடு முழுவதும் பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள் வேகமான இணைய சேவைகளை பெற முடியும் என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவிக்கிறது அண்மையில் தான் அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 89,047 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது. 4ஜி மற்றும் 5ஜி சேவை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என பிஎஸ்என்எல் தெரிவிக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications