சென்னை : இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்கள் தான் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களாக செயல்பட்டு வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு இந்த இரண்டு நிறுவனங்களும் தங்களின் ரீசார்ஜ் கட்டணங்களை அதிகரித்தன. இதனை அடுத்து பெரும்பாலான மக்கள் பிஎஸ்என்எல்-க்கு மாற தொடங்கினர்.
இந்த வாய்ப்பை பெரிய அளவில் பயன்படுத்தி கொண்டிருக்கும் பிஎஸ்என்எல் 997 ரூபாய்க்கு ஒரு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ரீசார்ஜ் திட்டம் தொலைத்தொடர்பு சந்தையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என சொல்லப்படுகிறது.

160 நாட்களுக்கு வேலிடிட்டி கொண்ட இந்த 997 ரூபாய் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு ஐந்து மாதங்களுக்கு தொலைதொடர்பு சேவையை வழங்குகிறது. இந்த ஐந்து மாதங்களில் பயனாளர்கள் ஒரு நாளைக்கு 2 ஜிபி வரை டேட்டா பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மொத்தமாக 5 மாத காலத்திற்கும் 320 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இது மட்டும் இன்றி கூடுதலாக ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் இலவசமாக அனுப்பலாம் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதியும் இதில் இருக்கிறது. இந்த விரிவான ரீசார்ஜ் திட்டம் பல்வேறு வசதிகளையும் கொண்டிருப்பது. குறிப்பாக Hardy Games, Zing Music, BSNL Tune ஆகியவற்றை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
பிஎஸ்என்எல் நிறுவனம் கூடிய விரைவில் 4ஜி மற்றும் 5ஜி துறையில் கால் பதிக்க இருக்கிறது. இதன் காரணமாகவும் தற்போது மக்கள் பிஎஸ்என்எல் பக்கம் கவனத்தை திருப்பி இருப்பதால் வாடிக்கையாளர்களை அதிகரிக்கும் நோக்கிலும் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் இருக்கிறது.
வரும் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை நடைமுறைக்கு கொண்டுவர இருக்கிறது. இதற்காக வாடிக்கையாளர்களுக்கு புதிய சிம்கார்டுகள் வழங்கப்பட்டு வருவதாக பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் கூடிய விரைவில் 5ஜி சேவையையும் கொண்டு வருவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.
5ஜி மற்றும் 4ஜி சேவைகள் முழுமையாக அமலாகும் பட்சத்தில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. ஏனெனில் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த அளவிலான ரீசார்ஜ் கட்டணங்களை கொண்டு இருக்கிறது. இருந்தாலும் டவர் கிடைப்பது பிரச்சினையாக இருக்கும் என்பதால் தான் பலர் இந்த சேவையை பெறுவதில் பெறுவதில் தயக்கம் காட்டுகின்றனர். அது சரி செய்யப்பட்டால் நிச்சயம் இது தனியார் நிறுவனங்களோடு போட்டி போடும்.
Story written by: Devika
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications