இந்தியாவின் 3 தனியார் டெலிகாம் சேவை நிறுவனங்களும் தங்களது டெலிகாம் திட்டங்களின் கட்டணத்தை சுமார் 26 சதவீதம் வரையில் உயர்த்துவதாக அறிவித்துள்ளது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த கட்டண உயர்வு ஜூலை 4 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
மக்கள் ஏற்கனவே விலைவாசி மற்றும் பொருளாதார சுமையுடன் இருக்கும் நிலையில், இந்த கட்டண உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். ஆனால், இந்த சூழலில், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும செய்தியை வெளியிட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் புதிய ரூ.249 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் BSNL. இத்திட்டம் வாடிக்கையாளர்களுக்கு கணிசமான சேமிப்பையும், அதிகப்படியான நன்மைகளையும் வழங்குகிறது என்பது தான் முக்கியமான விஷயம்.
ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்களது கட்டண உயர்வு ஜூலை 3, 2024 முதல் அமலுக்கு வருகிறது. இதேபோல் வோடஃபோன் ஐடியா தனது கட்டண உயர்வு ஜூலை 4, 2024 முதல் அமலுக்கு வருகிறது. இந்த மாற்றங்களால், வாடிக்கையாளர்கள் தற்போது செலுத்தும் கட்டணத்தை விட வருடத்திற்கு சுமார் ரூ.600 அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும். இது மக்களின் பாக்கெட்டை ஓட்டையாக்கும் ஒரு திட்டமாகும்.
இந்நிலையில் தனியார் நிறுவனங்களின் கட்டண உயர்வுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய ரூ.249 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
BSNL-ன் புதிய ரூ.249 திட்டம் 45 நாட்கள் செல்லுபடியாகும். இது பிஎஸ்என்எல் திட்டங்களின் பிற திட்டங்களை ஒப்பிடுகையில் அதிகப்படியான செல்லுபடி காலம் கொண்டது. இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்குக்கும் இலவசமாக அழைக்க முடியும்.
BSNL-ன் புதிய ரூ.249 திட்டத்தின் மூலம் 45 நாட்களுக்கு தினசரி 2GB என மொத்தமாக 90GB தரவு வழங்கப்படுகிறது. தினசரி 100 இலவச SMS வசதியும் BSNL வழங்குகிறது. குறைந்த விலையில், இந்த விரிவான திட்டத்தை வழங்குவதன் மூலம், பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் நிதிச்சுமையைக் குறைத்து, அதே நேரத்தில் சிறந்த சேவையையும் வழங்க முயற்சிக்கிறது.
பிஎஸ்என்எல் VS ஏர்டெல்: பிஎஸ்என்எல் அறிவித்துள்ள புதிய திட்டத்தின் பலனை புரிந்து கொள்ள, அதை ஏர்டெல் நிறுவனத்தின் திட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்:
ஏர்டெல் ரூ.249 திட்டம்:
செல்லுபடி காலம்: 28 நாட்கள்
தினசரி டேட்டா: 1GB
பிஎஸ்என்எல் ரூ.249 திட்டம்:
செல்லுபடி காலம்: 45 நாட்கள்
தினசரி டேட்டா: 2GB
புதிய BSNL திட்டம் அதன் வாடிக்கையாளர்களுக்கு 17 கூடுதல் நாட்கள் சேவையை வழங்குவது மட்டுமல்லாமல், அதே விலையில் கிடைக்கும் ஏர்டெல் திட்டத்துடன் ஒப்பிடும் போது தினமும் 1 ஜிபி டேட்டா கூடுதலாக வழங்குகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications