அரசு தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் புதுச்சேரியில் மூன்று புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.
Intranet TV (BiTV): புதுச்சேரியில் பிஎஸ் என் எல் நிறுவனம் சார்பாக பிஐ டிவி என்ற சேவை சோதனை ஓட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு கூடுதல் கட்டணமும் செலுத்தாமல் 300 தொலைக்காட்சிகளை நேரலையில் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் டாக்குமென்டரிகள் உள்ளிட்டவற்றை பல்வேறு மொழிகளிலும் பிஎஸ்என்எல் மொபைல் இன்ட்ராநெட்டின் BiTV வழியாக வாடிக்கையாளர்கள் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓடிடிபிளே- உடன் பிஎஸ்என்எல் ஒப்பந்தம் செய்து இந்த சேவையை வழங்குகிறது.

எங்கிருந்தும் இலவசமாக இந்த பிஐ டிவி பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் பார்க்கலாம் என பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரி ராபர்ட் ரவி தெரிவித்துள்ளார்.
மொபைல் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை கொண்டு வரப்பட்டுள்ளது. பிஐ டிவி சேவை அடுத்த மாதத்தில் இந்த சேவையானது உத்தரபிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர் நாடு முழுவதும் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வை-ஃபை கிராமம்: புதுச்சேரி மாநிலத்தின் மண்ணடிப்பட்டு கிராமம் வைஃபை கிராமமாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே முழுவதுமாக வைஃபை சேவை பெற்ற இரண்டாவது கிராமம் என்ற பெருமை மண்ணடிப்பட்டு கிராமத்திற்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்த கிராமத்தில் இருக்கும் வைஃபை ஹாட்ஸ்பாட்டுகளை பயன்படுத்தி அனைவருமே வைஃபை சேவையை பெற்றுக் கொள்ள முடியும்.
பிஎஸ்என்எல் FTTH சப்ஸ்க்ரைபர்கள் எந்த ஒரு பிஎஸ்என்எல் வைஃபை ஹாட்ஸ்பாட் மூலமாகவும் டேட்டா கனெக்சனை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக பிஎஸ்என்எல் மொபைல் வாடிக்கையாளர்கள் ஒருமுறை பதிவு செய்தாலே போதும் எங்கெல்லாம் பிஎஸ்என்எல் வைஃபை கிடைக்கிறதோ அங்கெல்லாம் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் அல்லாத வாடிக்கையாளர்கள் யுபிஐ பேமென்ட் வழியாக கட்டணம் செலுத்தி இந்த ஹாட்ஸ்பாட் வசதிகளை பெற முடியும்.
Intranet Fibre-based TV (IFTV): பிஎஸ்என்எல் நிறுவனம் ஐஎஃப் டிவி என்ற புதிய இண்ட்ராநெட் சேவையை புதுச்சேரியில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரியை சேர்ந்த FTTH சந்தாதாரர்கள் 500க்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நேரலையில் காண முடிவு.
இதற்காக அவர்கள் எந்த ஒரு கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இதற்கான அனுமதியை ஒரு முறை வழங்கினால் போதும் வாடிக்கையாளர்கள் பல்வேறு நிகழ்ச்சிகள், படங்கள், ஆவணப் படங்களை எந்த ஒரு இடையூறும் இன்றி எளிதாக கண்டுகளிக்கலாம்.
Story written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications