அரசு நடத்தும் தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் மற்ற தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களைப் போல விரைவில் 4G மற்றும் 5G சேவைகளை நாடு முழுவதும் தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது இந்த சேவைகள் பிஎஸ்என்எல்லில் இல்லாததால் பலர் இன்னும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறாமல் உள்ளனர். இந்த நிலையில், இப்போது பிஎஸ்என்எல் தனது சேவையை மேலும் மேம்படுத்த மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.
சமீப காலமாக தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியதை அடுத்து அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மீது அனைவரது பார்வையும் விழுந்தது. மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மலிவான சேவையை வழங்குகிறது. எனவே, பலர் தங்கள் எண்களை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு போர்ட் செய்து வருகின்றனர். மற்ற நிறுவனங்களைப் போல, BSNL இன்னும் 4G மற்றும் 5G சேவைகளை நாடு முழுவதும் தொடங்கவில்லை. இதனால் பல வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறாமல் இருப்பதற்கு இதுவே காரணம்.

பிஎஸ்என்எல் 4ஜி சேவை மே 2025க்குள் நாடு முழுவதும் செயல்படத் தொடங்கும்:பிஎஸ்என்எல்லின் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளுக்கு அரசு உதவியுடன், மிக விரைவில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களும் தனியார் நிறுவனங்களைப் போல நல்ல நெட்வொர்க் மற்றும் வேகமான இணைய வேகத்தைப் பெறத் தொடங்குவார்கள் என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்தை ஒரு லட்சம் அடிப்படை நிலையங்கள் மூலம் செயல்படுத்தும் பணியை பிஎஸ்என்எல் நிறைவு செய்யும் என்றும், அதன்பிறகு 5ஜி நெட்வொர்க்கை விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கும் அமைச்சர் கூறியுள்ளார்.
பிஎஸ்என்எல் 5G ஜூன் 2025 முதல் அதன் சேவையை தொடங்கும்: அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பிஎஸ்என்எல் 5ஜி சேவையை தொடங்கும் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், இப்போது எங்களிடம் ஒரு முக்கிய மற்றும் ரேடியோ அணுகல் நெட்வொர்க் உள்ளது என்றும் அவை முழுமையாக செயல்படுகின்றன. அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதத்திற்குள் ஒரு லட்சம் தளங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார். நேற்று வரை 38,300 தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், இதன்மூலம் சொந்த 4G நெட்வொர்க்கைத் தொடங்கவும், இது ஜூன் 2025க்குள் 5Gக்கு மாறும் என்று தெரிவித்துள்ளார்.
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், அரசு நிறுவனமான சி-டாட் மற்றும் உள்நாட்டு ஐடி நிறுவனமான டிசிஎஸ் ஆகியவற்றுடன் கைகோர்த்து 4ஜி சேவையில் தற்போது செயல்பட்டு வருகிறது. இதற்கிடையில், நாட்டில் 22 மாதங்களில் 4.5 லட்சம் டவர்களை நிறுவப்பட்டதன் மூலம் 5G தொழில்நுட்பத்தை உலகிலேயே மிக வேகமாக இந்தியா செயல்படுத்தியதாகவும், இந்த சேவை நாட்டின் 80 சதவீத மக்களுக்கு கிடைக்கிறது என்றும் மத்திய ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.
அதேபோல், 10 ஆண்டுகளுக்கு முன்பு 60 மில்லியனாக இருந்த பிராட்பேண்ட் இணைப்புகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து 940 மில்லியனாக இந்திய தொலைத்தொடர்பு துறையில் முழுமையான மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications