இந்தியாவின் ஒரே அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) கடந்த சில மாதங்களாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை அதிகரித்த பிறகு, பலர் தங்கள் எண்களை BSNL க்கு போர்ட் செய்துள்ளனர், இதற்கு BSNL வழங்கும் மலிவான ரீசார்ஜ் திட்டங்களே மிகப்பெரிய காரணம்.
கடந்த ஜூலையில் ஏர்டெல், ஜியோ மற்றும் வோடஃபோன் ஐடியா நெட்வோர்க்குகள் தங்களது மொபைல் கட்டணத்திற்குப் பிறகு, ஆகஸ்ட் 2024 மற்றும் அக்டோபர் 2024 க்கு இடையில் 3.6 மில்லியன் புதிய மொபைல் பயனர்களை BSNL சேர்த்துள்ளது.ஆகஸ்டு மாதத்தில் மொத்தம் 2.52 மில்லியன் புதிய பயனர்கள் பிஎஸ்என்எல் உடன் இணைக்கப்பட்டுள்ளனர். செப்டம்பர் மாதத்தில், 0.38 மில்லியன் புதிய பயனர்கள் BSNL இல் இணைந்தனர் மற்றும் அக்டோபர் மாதத்தில், மொத்தம் 0.76 மில்லியன் புதிய பயனர்கள் BSNL இல் இணைந்தனர். சமீபத்தில் ஏர்டெல், ஜியோ நிறுவனங்களும் வாடிக்கையாளர்கள் தங்கள் வசம் வைத்திருக்க பல்வேறு ஆஃபர்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனாலும் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் பக்கம் அதிகளவில் தாவி வருகின்றனர்.

ப்ரீபெய்டு இணைப்புகளின் எண்ணிக்கையில் முன்னேற்றம்: BSNL இன் ப்ரீபெய்டு இணைப்புகளின் எண்ணிக்கை ஜூலை மாதத்தில் 88.41 மில்லியனாக இருந்தது. இது அக்டோபர் மாதத்தில் 92.04 மில்லியனாக அதிகரித்துள்ளது. போஸ்ட்பெய்டு இணைப்புகளைப் பொறுத்தவரை, அதன் எண்ணிக்கை ஜூலை மற்றும் அக்டோபர் இடையே 4.42 மில்லியனில் இருந்து 4.48 மில்லியனாக அதிகரித்துள்ளது.
பிஎஸ்என்எல் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் அதன் 4ஜி நெட்வொர்க்கிலும் மிக வேகமாக செயல்படுகிறது. இதுவரை 62 ஆயிரம் டவர்களை பிஎஸ்என்எல் நிறுவியுள்ளது. 1 லட்சம் டவர்களை நிறுவுவதே இதன் நோக்கம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுதவிர 4G மற்றும் 5G நெட்வொர்க்கிலும் முழு கவனம் செலுத்த தயாராக உள்ளது. 2025 ஏப்ரல்-மே மாதத்திற்குப் பிறகு, BSNL அதன் 5G சேவையையும் தொடங்கும். BSNL சமீபத்தில் தனது புதிய 7 சேவையை அறிமுகப்படுத்தியது. மேலும் அதன் புதிய லோகோ மற்றும் கோஷத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications