இந்திய சந்தையில் தகவல் தொடர்பு சேவைகளை வழங்கக்கூடிய நிறுவனங்களில் ஏர்டெல் மற்றும் ஜியோ முன்னணி நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன.
இருப்பினும் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் இந்த இரண்டு நிறுவனங்களோடு போட்டி போட்டு பல்வேறு ஆஃபர்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் 600gb டேட்டா வழங்கக்கூடிய பிஎஸ்என்எல் வழங்கும் ஒரு சூப்பரான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் குறித்து இந்த கட்டுரையில் நாம் பார்க்க இருக்கிறோம்.

தற்போது இந்தியாவில் பிஎஸ்என்எல் நிறுவனமானது 4ஜி சேவைகளை வழங்கி வருகிறது. விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனம் 5g சேவைகளையும் கொண்டு வர இருக்கிறது.
இந்த நிலையில் பிஎஸ்என்எல் 365 நாட்களுக்கு வேலிடிட்டி கொண்ட ஒரு ப்ரீபெய்டு பிளானை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்பவர்கள் ஓராண்டுக்கு 600 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இதில் ஒரு நாளைக்கு இவ்வளவுதான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. இந்த தகவலை பிஎஸ்என்எல் நிறுவனம் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
ரீசார்ஜ் திட்டத்திற்கு பிவி1999 என பெயர் சூட்டியுள்ளனர். அதாவது 1999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து விட்டால் இதன் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். எனவே அந்த ஓராண்டு காலத்திற்கு பயனாளர்கள் வேறு எந்த வித ரீசார்ஜூம் செய்ய வேண்டியது இல்லை.
இந்த திட்டத்தின் கீழ் இந்த ஓராண்டு காலத்திற்கு 600 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது அதைப்போல அன்னமிட்டட் வாய்ஸ் காலிங் மற்றும் ஃப்ரீ ரோமிங் ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்த ரீசார்ஜ் திட்டத்தோடு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்-களை இலவசமாக நாம் அனுப்பிக் கொள்ளலாம்.
அதேபோல வாவ் என்டர்டைன்மென்ட் (WOW Entertainment), ஜிங்க் மியூசிக் ( Zing Music), ஹார்டி கேம் (Hardy Games), பிஎஸ்என்எல் டியூன்ஸ் (BSNL Tunes), சேலஞ்சர் அரேய்னா கேம்ஸ் (Challenger Arena Games) ஆகியவற்றை நாம் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். பிஎஸ்என்எல் இணையதளம் அல்லது செயலி வாயிலாக நாம் எளிதாக இந்த ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications