ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா (Vi) போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் விலை உயர்வை அறிவித்துள்ள நிலையில், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) தனது ரீசார்ஜ் திட்டங்களை பிற டெலிகாம் நிறுவனங்களை விட மலிவான விலையில் தொடர்ந்து வழங்குகிறது. மேலும் இந்த ரீசார்ஜ் திட்டங்கள் பல நன்மைகளை தருகிறது. உதாரணமாக வடகிழக்கு மாநிலம் , ஜம்மு காஷ்மீர் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களுக்கு இந்நிறுவனம் வெவ்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகின்றன.
இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இந்தத் திட்டங்கள் கிடைக்காமல் போகலாம். ஏனெனில் BSNL அனைத்து பகுதிகளிலும் தனது சேவையை வழங்க தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே அதனுடைய சேவை தற்போது கிடைத்து வருகிறது. நீங்கள் ஒரு BSNL வாடிக்கையாளராக இருந்தால் அல்லது உங்கள் ஜியோ, ஏர்டெல், வோடபோன் சிம்மை BSNL-க்கு மாற்ற திட்டமிட்டிருந்தால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய BSNL ரீசார்ஜ் திட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

BSNL-இன் சிறந்த 15 ரீசார்ஜ் திட்டங்கள்:
ரூ.107 பிளான்: 200 நிமிட கால் வசதியும், 35 நாட்களுக்கான 3GB டேட்டாவையும் வழங்குகிறது.
ரூ.118 பிளான்: இந்த ரீசார்ஜ் திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 10GB டேட்டாவை 20 நாட்களுக்கு வழங்குகிறது.
ரூ.153 பிளான்: இந்தத் திட்டத்தில் 26 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் உடன், 26 GB டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS-ஐ பெற்றுக் கொள்ளலாம்.
ரூ.199 பிளான்: இந்த ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிடெட் கால் , ஒரு நாளைக்கு 2GB டேட்டா மற்றும் 100 SMS-ஐ 30 நாட்களுக்கு பெறமுடியும்.
ரூ.249 பிளான்: அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதிகளுடன் ஒரு நாளைக்கு 2 GB டேட்டா மற்றும் 100 SMS-ஐ 45 நாட்களுக்கு பெறமுடியும்.
ரூ. 347 பிளான்: இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதியுடன் ஒரு நாளைக்கு 2 GB டேட்டா மற்றும் 100 SMS-ஐ 54 நாட்களுக்கு வழங்குகிறது.
ரூ. 599 பிளான்: இந்த திட்டத்த்தில், நீங்கள் ரீசார்ஜ் செய்வதன் மூலம் உங்களுக்கு அன்லிமிடெட் கால் வசதியுடன், ஒரு நாளைக்கு 2 GB டேட்டாவை 84 நாட்களுக்குப் பெற முடியும். மேலும் இது ஒரு நாளைக்கு 100 SMS-ஐ வழங்குகிறது.
ரூ.666 பிளான்: இந்த திட்டத்தில் அன்லிமிடெட் கால், ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 2 GB டேட்டாவை பெற முடியும். மேலும் இந்த திட்டம் 105 நாட்களுக்கு செல்லுபடி ஆகும்.
ரூ.699 பிளான்: இந்த ரீசார்ஜ் திட்டம் அன்லிமிடெட் கால் மற்றும் ஒரு நாளைக்கு 0.5 GB டேட்டாவை 130 நாட்களுக்கு வழங்குகிறது. மேலும் ஒரு நாளைக்கு 100 SMS-ஐ பெறலாம்.
ரூ.997 பிளான்: இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடட் கால் மற்றும் ஒரு நாளைக்கு 2 GB டேட்டாவை 160 நாட்களுக்கு வழங்குகிறது. மேலும் ஒரு நாளைக்கு 100 SMS-ஐ பெறலாம்.
ரூ.1,198 பிளான்: இந்த ரீசார்ஜ் மூலம் 300 நிமிட கால் வசதி மற்றும் ஒரு மாதத்திற்கு 3 GB டேட்டா என்ற விகிதத்தில் 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் ஒரு மாதத்திற்கு 30 SMS-ஐ செய்து கொள்ளலாம்.
ரூ.1,499 பிளான்: இந்த திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 24 GB டேட்டா மற்றும் 100 SMS-ஐ 336 நாட்களுக்கு வழங்குகிறது.
ரூ.1,999 பிளான்: இந்த ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிடெட் கால் மற்றும் 600 GB டேட்டாவை 365 நாட்களுக்கு பெற முடியும். மேலும் ஒரு நாளைக்கு 100 SMS செய்து கொள்ளலாம்.
ரூ.2,399 பிளான்: இந்த திட்டத்தில் அன்லிமிடட் கால் மற்றும் ஒரு நாளைக்கு 2 GB டேட்டா, 100 SMS ஆகியவற்றை 395 நாட்களுக்கு பெற முடியும்.
ரூ.2,999 பிளான்: இது ஒரு ப்ரீபெய்ட் பேக்காகும். இதில் அன்லிமிடட் கால் ,ஒரு நாளைக்கு 3GB டேட்டா மற்றும் 100 SMS-ஐ 365 நாட்களுக்கு வழங்குகிறது.
FRC பிளான்: இந்த திட்டத்தின் விலை ரூ.999 ஆகும். இந்த திட்டத்தில் நீங்கள் அன்லிமிடெட் கால் மட்டுமே செய்ய முடியும். இந்தத் திட்டம் உங்களுக்கு 200 நாட்கள் வரை செல்லுபடி ஆகும்.
ரூ. 108 பிளான்: இது புதிய வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் ஒரு திட்டமாகும். இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 1 GB டேட்டாவுடன் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications