கடந்த ஜூலை மாதம் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய 3 நிறுவனங்கள் தங்களுடைய ரீசார்ஜ் கட்டண உயர்வை அறிவித்தன. அதன் பிறகு நிறைய பேர் தங்களுடைய நெட்வொர்க் ஆபரேட்டரை BSNL-க்கு மாற்றிக்கொண்டனர். நீங்களும் இது போன்ற நபர் எனில் உங்களுக்காக தான் இந்தப் பதிவு. இந்த பதிவில் அன்லிமிடெட் கால் வசதி, அன்லிமிடெட் டேட்டா மற்றும் SMS-களை வழங்கும் சிறந்த BSNL ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து பார்ப்போம்.
ரூ.147 ரூபாய் கொண்ட BSNL ரீசார்ஜ் பிளான்: நீங்கள் அதிகமாக டேட்டா பயன்படுத்தாத நபர் எனில் இந்த ரீசார்ஜ் பிளானை பயன்படுத்தலாம். இதற்கு 10 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் அன்லிமிடெட் கால் வசதியுடன் 30 நாட்கள் செல்லுபடியாகும்.

ரூ.187 ரூபாய் கொண்ட BSNL ரீசார்ஜ் பிளான்: இந்தத் திட்டத்தை நீங்கள் தேர்வுசெய்தால், அன்லிமிடெட் கால் வசதி மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS-உடன் 2ஜிபி டேட்டாவைப் பெறலாம். இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
ரூ.247 ரூபாய் கொண்ட BSNL ரீசார்ஜ் பிளான்: அதிக டேட்டாவை விரும்பும் பயனர்கள் ரூ.247 செலுத்தி அன்லிமிடெட் கால் வசதியுடன் 30 நாட்களுக்கு 50ஜிபி டேட்டாவைப் பெறலாம்.
ரூ.319 ரூபாய் கொண்ட BSNL ரீசார்ஜ் பிளான்: அன்லிமிடெட் கால் வசதியுடன் 10ஜிபி டேட்டாவை இந்த திட்டம் வழங்குகிறது. இந்த திட்டம் 65 நாட்களுக்கு செல்லுபடியாகும் பிளான்.
ரூ.398 ரூபாய் கொண்ட BSNL ரீசார்ஜ் பிளான்: இந்த ரீசார்ஜ் திட்டம் அன்லிமிடெட் கால் வசதியை வழங்குகிறது. ஒரு நாளைக்கு 100 SMS வரை அனுப்பிக் கொள்ளலாம். மேலும் இந்த திட்டம் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் ஒரு பிளான்.
ரூ.447 ரூபாய் கொண்ட BSNL ரீசார்ஜ் பிளான்: இந்தத் திட்டம் 2 மாதங்களுக்கு செல்லுபடி ஆகும். மேலும் இந்த 2 மாதங்களுக்கு அன்லிமிடெட் கால் வசதியும், 100 ஜிபி டேட்டாவையும் பெற்றுக் கொள்ளலாம்.
ரூ.499 ரூபாய் கொண்ட BSNL ரீசார்ஜ் பிளான்: வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 90 நாட்களுக்கு அன்லிமிடெட் கால் வசதியைப் பெற்றுக் கொள்ளலாம். இது ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் உடன் ஒப்பிடும்போது மிகவும் மலிவான திட்டமாகும்.


Click it and Unblock the Notifications