டெல்லி: தொலைத் தொடர்பு துறையில் நிலவி வரும் பிரச்சனைகளை நீக்க, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை கடந்த சில வாரங்களுக்கு முன்பு உயர்த்தின.
அதிலும் சில நிறுவனங்கள் 40 சதவிகிதம் வரை கட்டணத்தை உயர்த்தின. இதனால் தாங்கள் நஷ்டத்திருந்து மீள முடியும் என்றும் ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தின.
இந்த நிலையில் பொதுத்துறையை சேர்ந்த பிஎஸ்என்எல் நிறுவனம் தனது கட்டண விகிதத்தை பின்பு அறிவிப்பதாக தெரிவித்த நிலையில், தற்போது பிஎஸ்என்எல் கட்டண விகிதத்தில் ஏதும் மாற்றம் இல்லை என்றும் அறிவித்துள்ளது. ஆனால் வேலிட்டியில் சிறிது மாற்றம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கட்டணத்தில் மாற்றம் இல்லை
பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது வழங்கி வரும் ப்ரீபெயிடு சலுகைகளின் பலன்களை மாற்றியமைத்து இருக்கிறது. இதன் படி 118 ரூபாய், 187 ரூபாய், மற்றும் 399 ரூபாய் ப்ரீபெயிடு சலுகைகளின் வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் தங்களின் சேவை கட்டணத்தை உயர்த்திய நிலையில், பிஎஸ்என்எல் தனது வேலிட்டியை மட்டும் குறைத்துள்ளது.
வேலிட்டியில் மாற்றம்
கட்டணத்தில் மாற்றம் இல்லை என்றாலும், வேலிட்டியில் மாற்றம் செய்துள்ளதாகவும் பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. இதன் படி கேரளாவில் பி.எஸ்.என்.எல் 118 ரூபாய் சலுகைக்கு தற்சமயம் 21 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இதுவே மற்ற வட்டாரங்களில் இந்த சலுகையில் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. வேலிடிட்டி தவிர சலுகையின் பலன்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
வேறு என்ன சலுகை வழங்கப்படுகிறது?
இதனால் வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் கிடைக்கும் தினமும் 250 நிமிடங்கள் வாய்ஸ் கால், 0.5 ஜி.பி. அதிவேக டேட்டா, பிரத்யேக ரிங் பேக் டோன், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதுவே 187 சலுகையின் வேலிடிட்டியும் 28 நாட்களில் இருந்து தற்சமயம் 24 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் தினமும் 250 நிமிடங்கள் வாய்ஸ் கால், 3 ஜி.பி. அதிவேக டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
அன்லிமிடெட் கால்கள்
பி.எஸ்.என்.எல்லின் 349 ரூபாய் ப்ரீபெயிடு சலுகையானது 64 நாட்களில் இருந்து 56 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, தினசரி 100 இலவச எஸ்எம்எஸ்கள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதே 399 ரூபாய் திட்டத்தில் 74 நாட்களாக இருக்கும் வேலிட்டியை, 65 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதில் அன்லிமிடெட் கால்கள் மற்றும் தினசரி 2 ஜிபி டேட்டா, தினசரி 100 மேசேஜ்கள் வழங்கப்படுகின்றன.
மற்ற வட்டாரங்களில் இலவச சேவை
இதே சலுகை மற்ற வட்டாரங்களில் 80 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. எனினும், இதன் டேட்டா அளவு தினசரி 1 ஜி.பி.யில் இருந்து தற்சமயம் தினமும் 2 ஜி.பி.யாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்துடன் 250 நிமிடங்கள் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
2ஜி சேவை வழங்கி வந்த நிலையில் கூட, மக்களிடம் பெரும்பான்மையான இடங்களை வகித்தது. அதிலும் கிராமப்புறங்களில் நல்ல வறவேற்பு இருந்து வந்தது. இந்த நிலையில் பிஎஸ்என்எல்லின் அதிரடியான இந்த மாற்றத்தினாலும், மேம்படுத்தப்பட்டு வரும் நடவடிக்கைகளாலும் தொலைத் தொடர்பு துறையில் மீண்டும் முக்கிய இடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications