டெல்லி: அரசு தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் நாடு முழுவதும் 39,000 இடங்களில் 4g டவர்களை நிறுவியுள்ளது .அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் பிஎஸ்என்எல் நிறுவனம் சார்பாக நாடு முழுவதிலும் 1 லட்சம் கோடி 4ஜி சேவைக்கான டவர்கள் நிறுவப்படும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இந்த டவர்களை நிறுவும் பொறுப்பினை டிசிஎஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டு செய்து வருகிறது .தேஜாஸ் நெட்வொர்க் அண்டு தி சென்டர் ஃபார் டெவெலப்மென்ட் ஆப் டெலிமெடிக்ஸ் அமைப்போடு இணைந்து டிசிஎஸ் நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தேவையான 4ஜி டவர்களை நாடு முழுவதும் நிறுவி வருகிறது.

மேலும் 58,000 முதல் 59,000 இடங்களில் டவர்களை நிறுவப்படுவதற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் அந்தந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடப்பு அக்டோபர் மாதத்தில் மட்டும் 12,000 இடங்களுக்கு டவர்களை நிறுவுவதற்கான உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம். தற்போது 49000 இடங்களில் 4ஜி டவர்கள் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளன, இதில் 39,000 டவர்கள் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளன என டிசிஎஸ் நிறுவனத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கான டவர் அமைக்கும் பணிகளுக்கு மேலாளராக இருக்கும் கணபதி சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு நாளைக்கு 450 முதல் 500 இடங்களில் டவர்களை நிறுவும் பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.
கூடிய விரைவில் 1 லட்சம் டவர்கள் என்ற இலக்கு எட்டப்பட்டு விடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி நெட்வொர்க் என்பது 700MHz பேண்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்படும் என சொல்லப்படுகிறது.
குறிப்பாக கிராமப்புறங்களில் 4ஜி சேவைகள் வழங்குவதில் பிஎஸ்என்எல் நிறுவனம் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. அது மட்டும் இன்றி நகர்ப்புறங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம் தங்களுடைய 4ஜி நெட்வொர்க்கில் வேகமான இணைப்புகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போது இந்தியாவில் ஜியோ நிறுவனம் தன்னுடைய 5g சேவைகளை வழங்குவதற்கு 700 MHz பேண்டினை பயன்படுத்துகிறது. இந்தியாவிலேயே இத்தகைய பேண்டினை கொண்டு 4ஜி சேவையை வழங்கும் நிறுவனமாக பிஎஸ்என்எல் மட்டுமே இருக்கிறது. அதே வேளையில் நகர்ப்பகுதிகளில் சேவையை விரிவுபடுத்த 2100 MHz, 1800 MHz, 850 MHz, 900 MHz பேண்டுகளை பிஎஸ்என்எல் பயன்படுத்துகிறது.
இந்தியாவில் தொலைதொடர்பு சேவை துறையில் தனியாரின் ஆதிக்கம் வலுவாக இருக்கிறது. ஜியோ, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு வேகமான இணைப்புகளை வழங்குகின்றன. இருந்தாலும் அவற்றுக்கு மக்கள் அதிக விலையை செலுத்த வேண்டி இருக்கிறது. எனவே பிஎஸ்என்எல் நிறுவனத்தை மக்கள் மாறுகின்றனர். எனவே தான் 4ஜி சேவைகளை விரிவுபடுத்த பிஎஸ்என்எல் கவனம் செலுத்துகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications