டெல்லி: புதிய டெலிகாம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரக்கூடிய அரசு தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் இதுவரை நெட்வொர்க் கவரேஜே இல்லாத பகுதிகளில் புதிதாக 5000 டவர்களை நிறுவி இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் அரசு தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் தனியார் நிறுவனங்களுக்கு நிகராக தன்னுடைய சேவையை விரிவு படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அந்த வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி நெட்வொர்க் சேவையை வழங்குவதற்கான பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. அண்மையில் இந்த நிறுவனம் நாடு முழுவதும் 50,000 இடங்களில் 4ஜி மொபைல் டவர்களை நிறுவியுள்ளது. இதில் 41,000 டவர்கள் தற்போது பயன்பாட்டுக்கு வந்து விட்டன.
பிஎஸ்என்எல் நிறுவனம் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின் படி இதுவரை நெட்வொர்க் கவரேஜே இல்லாத பகுதிகளில் 5000 டவர்கள் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் கிராமப்புறங்களிலும் முழுமையான நெட்வொர்க் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என பிஎஸ்என்எல் நிறுவனம் கூறியுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவில் 95 சதவீத பகுதிகளில் மொபைல் நெட்வொர்க் வழங்குவதாக தெரிவித்துள்ளது. மீதமுள்ள 5 சதவீத பகுதிகளில் டவர்களை நிறுவி மொபைல் சேவைகளை வழங்கும் நடவடிக்கைகளை தீவிர படுத்திருப்பதாக கூறியுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தை பொருத்தவரை நாடு முழுவதும் 4ஜி சேவைகளை வழங்குவதற்காக அடுத்த ஜூன் மாதத்திற்கு 1 லட்சம் மொபைல் டவர்களை நிறுவுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவைக்கான சிம் கார்டுகளை வழங்கும் பணிகளையும் முன்னெடுத்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களுடைய 4ஜி சிம்களை பெறுவதற்காக பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு வரவேண்டிய தேவை இல்லை என தெரிவித்துள்ளது.
இதற்காக ஏடிஎம் போன்ற தானாகவே சிம் கார்டுகளை வழங்கக்கூடிய இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களுடைய பிஎஸ்என்எல் செல்ஃப் கேர் செயலி (BSNL Self Care app) வாயிலாக புதிய சிம் கார்டினை பெறுவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளலாம். இது தவிர 5ஜி சேவைகளையும் வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு இருக்கிறது.
கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடபோன் -ஐடியா ஆகியவை தங்களுடைய ரீசார்ஜ் கட்டணங்களை கணிசமான அளவு உயர்த்தின. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள வாடிக்கையாளர்கள் பலரும் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
எனவே பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை மாதந்தோறும் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ற வகையில் வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இன்டர்நெட் மற்றும் நவீன மொபைல் நெட்வொர்க் வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருப்பதாகவும் இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதாகவும் பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications