BSNL-க்கு குவிந்து வரும் வாடிக்கையாளர் ஆதரவு.. ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி சாதனை!

தொலைத்தொடர்பு நிறுவனங்களில் பின்தங்கிய நிலையில் இருப்பதாகக் கருதப்படும் BSNL கடந்த சில மாதங்களாக தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களைக் காட்டிலும் வளர்ந்து வரும் போக்கை தொடர்கிறது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் வெளியிட்ட மதிப்பீட்டின்படி BSNL சந்தாதாரர்களின் எண்ணிக்கை கடந்த 2 மாதங்களாக அதிகரித்து வருகிறது. குறைந்த கட்டணங்கள் மற்றும் 4ஜி சேவைகளின் அறிமுகம் ஆகியவற்றால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டண உயர்வை அறிவித்தன. இதன் போது BSNL கிட்டத்தட்ட 3 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை பெற்றது. அதற்கான முக்கிய காரணம் BSNL எந்த வித ரீசார்ஜ் கட்டண உயர்வையும் அறிவிக்காதது தான்.

 BSNL-க்கு குவிந்து வரும் வாடிக்கையாளர் ஆதரவு.. ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி சாதனை!

ஏர்டெல் 1.7 மில்லியன் பயனர்களை இழந்துள்ளது, வோடபோன் ஐடியா 1.4 மில்லியன் பயனர்களை இழந்துள்ளது, அதேபோல ஜியோ கிட்டத்தட்ட 0.8 மில்லியன் பயனர்களை இழந்து 3-வது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களை காட்டிலும் BSNL அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்றது. ஆகஸ்ட் மாதம் BSNL 2.5 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

ஆனால் இதே மாதம் ஜியோ நிறுவனம் 4 மில்லியன் பயனர்களை இழந்துள்ளது. அதேபோல ஏர்டெல் நிறுவனம் 2.4 மில்லியனும், வோடபோன் ஐடியா 1.9 மில்லியன் பயனர்களை இழந்துள்ளது.

என்னதான் வாடிக்கையாளர்களின் அளவு கணிசமாக உயர்ந்தாலும், BSNL நிறுவனத்தின் சந்தைப் பங்கு பிற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களை விடவும் குறைவாகத்தான் இருக்கிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் ஜியோ நிறுவனத்தின் சந்தைப் பங்கு 40.5 சதவீதமாகவும், ஏர்டெல்லின் சந்தைப் பங்கு 33 சதவீதமாகவும், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் சந்தைப் பங்கு 18 சதவீதமாகவும் உள்ளது. ஆனால் BSNL நிறுவனத்தின் சந்தை பங்கு 7.8 சதவீதமாக குறைவாகவே உள்ளது.

பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களைக் காட்டிலும் ரீசார்ஜ் கட்டணங்கள் BSNL வாடிக்கையாளர்களுக்கு குறைந்த அளவில் கிடைக்கிறது. இதுவும் BSNL தற்போது வளர்ந்து வருவதற்கு ஒரு காரணமாக உள்ளது. ஒரு பயனரின் ரீசார்ஜ் கட்டணத்திற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கிடைக்கும் ARPU அதாவது சராசரி வருவாய் மதிப்பு BSNL-க்கு குறைவாகத்தான் இருக்கிறது.

ஏர்டெல் நிறுவனத்தின் ARPU இப்போது ரூ.211 ரூபாயாகவும், ஜியோ நிறுவனத்தின் ARPU ரூ.195 ரூபாயாகவும், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ARPU ரூ.146 ரூபாயாகவும் உள்ளது. ஆனால் BSNL இன்னும் ரூ.100 ரூபாய்க்கு குறைவாகவே சராசரி வருவாய் பெற்று வருகிறது. BSNL சோதனைக் கட்டத்தில் 1.8 கோடி பயனர்களுக்கு 4G இணைப்புகளை வழங்கியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+