மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) ஆப்டிகல் டிரான்ஸ்போர்ட் நெட்வொர்க் (OTN) உபகரணங்களை வாங்கி அதை உள்ளூர் ஒருங்கிணைப்பாளர் மூலம் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் திட்டத்தை வேகமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் ஆப்டிகல் டிரான்ஸ்போர்ட் நெட்வொர்க் (OTN) வாங்குவதற்கு ஃபின்லாந்து நாட்டின் நோக்கியாவுக்கு சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான கொள்முதல் ஆர்டரை வழங்க உள்ளது.

பிஎஸ்என்எல் ஒப்பந்தத்திற்கான நிதி ஏலங்கள் திறக்கப்பட்டுவிட்டதாகவும், அடுத்த சில நாட்களில் வெற்றிகரமான ஏலதாரருக்கு முன்கூட்டிய கொள்முதல் உத்தரவு (APO) வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதோடு பிஎஸ்என்எல் நிறுவனம் உள்நாட்டு டெலிகாம் உபகரணங்கள் விற்பனையாளர்களான யுனைடெட் டெலிகாம்ஸ் லிமிடெட் (UTL) மற்றும் டாடா குழும நிறுவனமான தேஜாஸ் நெட்வொர்க்ஸ் ஆகியவை மற்ற போட்டியாளர்களும் முன்கூட்டிய கொள்முதல் உத்தரவு (APO) வழங்கும் என தெரிகிறது.
தற்போது மூன்று ஆண்டு செயல்பாடு மற்றும் பராமரிப்பு சேவைகள் மற்றும் 8 ஆண்டுகளுக்கு விரிவான வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தம் உடன் இந்திய அளவில் ஆப்டிகல் டிரான்ஸ்போர்ட் நெட்வொர்க் நிறுவும் நான்காம் கட்டம் திட்டத்தை பிஎஸ்என்எல் செயல்படுத்துவதே இந்த ஒப்பந்தம். இதோடு சிஸ்டம் ஒருங்கிணைப்பு திட்டத்தை HFCL கைப்பற்றியுள்ளது குறிப்பிடித்தக்கது.
இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான இருந்த மத்திய அரசின் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) நிறுவனத்தை மீட்டு எடுக்க சுமார் 89,047 கோடி மதிப்பிலான மீட்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை சில மாதங்களுக்கு முன்பு ஒப்புதல் அளித்துள்ளது.
பிஎஸ்என்எல் மோசமான டெலிகாம் உள்கட்டமைப்புடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தனியார் நிறுவனங்களிடம் வர்த்தகத்தை இழந்த வருகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் இப்போது 5ஜி சேவையில் அசத்தி வருகிறது. தனியார் டெலிகாம் நிறுவனத்தின் ஆதிக்கத்தால் பிஎஸ்என்ஸ் வயர்லெஸ் பிரிவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் BSNL நிறுவனம் தனது 4ஜி நெட்வொர்க்கை அறிமுகம் செய்வதற்காக சுமார் 1 லட்சம் தளங்களை பயன்படுத்த மத்திய அமைச்சர்கள் குழு (GOM) பச்சைக்கொடி காட்டி ஒப்புதல் அளித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை டாடா குழுமத்தின் தொழில்நுட்ப பிரிவான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) உடனான கூட்டணியில் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications