நாட்டில் ஸ்மார்ட்போன் அதிகரித்து விட்ட இந்த காலத்தில் இன்னும் பெரும்பாலான சிலர் ப்யூச்சர் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல், அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நெட்வோர்க்கையும் அதிகம் பயன்படுத்துகின்றனர். அதில், பெரும்பாலும் 40 வயதிற்கு மேற்பட்டோர் பிஎஸ்என்எல்லை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். பிஎஸ்என்எல் தற்போது வரை 3ஜி சேவையை மட்டுமே வழங்கி வருகிறது. இந்த நிலையில், தனது 4ஜி சேவையுடன் மலிவு விலையுடன் போனையும் வழங்க கார்பன் நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது.
இது ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்களுக்கு ஒரு பெரும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் 4ஜி சேவையை ஆரம்பித்த ஜியோ அதன் வாடிக்கையாளர்களை கவர மலிவு விலை போன்களை அறிமுகம் செய்து வந்தது. தற்போது பிஎஸ்என்எல் அதன் போன்களை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில், அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை அதிகரித்தன. அதன் பிறகு பிஎஸ்என்எல் மக்களின் கவனத்தை ஈர்த்தது. Jio, Vi மற்றும் Airtel உடன் ஒப்பிடும்போது BSNL மிகவும் மலிவான ரீசார்ஜ் திட்டங்களை மக்களுக்கு வழங்குகிறது. இதன் காரணமாக பலர் தங்கள் எண்களை பிஎஸ்என்எல்-க்கு போர்ட் செய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களில், பிஎஸ்என்எல் பல ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் அதிக நன்மைகளை வழங்குகிறது. இது தவிர பிஎஸ்என்எல்லின் 4ஜி நெட்வொர்க்கும் வேகமாக விரிவடைந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், பிஎஸ்என்எல் வேகமாக விரிவடைந்து வருகிறது. நாட்டில் சிலர் ஃப்யூச்சர் போன்களை பயன்படுத்துகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்காகவும் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய சேவையைத் தொடங்கவுள்ளது.
பிஎஸ்என்எல் தனது போன்களை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது:பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) கார்பன் மொபைல்ஸ் உடன் இணைந்து புதிய ஃபோனை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த பிஎஸ்என்எல் போன் ஜியோவின் போனை விட மலிவானதாக இருக்கும். பிஎஸ்என்எல்லின் இந்த புதிய போனுடன், பிஎஸ்என்எல் சிம் வசதியும் கிடைக்கும். மேலும் இந்த போனில் மக்கள் அதிவேக இணையத்தை பயன்படுத்த முடியும். பிஎஸ்என்எல் அதன் நிறுவனம் தொடங்கிய தினத்தன்று Karbonn Mobiles உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
பிஎஸ்என்எல்லின் இலக்கு என்ன?:பிஎஸ்என்எல் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் மலிவு விலையில் 4G இணைப்பைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பிஎஸ்என்எல் ஆனது Karbonn Mobile உடன் இணைந்து பாரத் 4ஜியின் கீழ் சிறப்பு சிம் கார்டு மற்றும் போன் தொகுப்பு சலுகையை வழங்கும் என பிஎஸ்என்எல் நிறுவனம் X தளத்தில் பதிவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications