BSNL நிறுவனத்தில் நடந்த தவறின் காரணமாக மத்திய அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் இந்திய தணிக்கை மற்றும் கட்டுப்பாட்டாளர் (CAG) அமைப்பு கண்டறிந்துள்ளது.
சி.ஏ.ஜி.யின் கண்டுபிடிப்புகளின்படி, ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் நிறுவனம் - பிஎஸ்என்எல் மத்தியில் செய்துக்கொண்ட மாஸ்டர் சர்வீஸ் ஒப்பந்தத்தில் (MSA) குறிப்பிடப்பட்டுள்ளபடி, பிஎஸ்என்எல்-க்கு சொந்தமான நெட்வொர்க் உள்கட்டமைப்பைப் பயன்படுத்தியதற்காக, சரியான முறையில் கட்டணம் வசூலிக்க பிஎஸ்என்எல் தவறியதால், 1,757.56 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

2014 மே முதல் 2024 மார்ச் வரையிலான 10 வருட காலத்திற்கு பிஎஸ்என்எல் உள்கட்டமைப்பில், ரிலையன்ஸ் ஜியோ பயன்படுத்திய கூடுதல் தொழில்நுட்பத்தை துல்லியமாக கணக்கிட முடியாக காரணத்தால் இந்த இழப்பு ஏற்பட்டு உள்ளது என CAG தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு வழங்குநர்களுக்கு (TIP), வருவாய் பங்கிலிருந்து உரிமக் கட்டணங்களின் பங்கை கழிக்க பிஎஸ்என்எல் தவறியதால் மற்றொரு வகையில் நிதி இழப்புகளை சி.ஏ.ஜி.யின் தணிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 38.36 கோடி ரூபாய் கூடுதல் இழப்புக்கு வழிவகுத்ததுள்ளது.
பிஎஸ்என்எல் ரிலையன்ஸ் ஜியோ உடனான ஒப்பந்தத்தை சரியான முறையில் அமல்படுத்தத் தவறியதால் இரண்டு பிரிவில் நிதி இழப்புகளை சந்துள்ளதாக சிஏஜி தெரிவித்துள்ளது. கடைசியாக செயலற்ற உள்கட்டமைப்புகளை பகிர்வதிலும் சரியான முரையில் பில்லிங் செய்யாத காரணத்தால் ஜி.எஸ்.டி உடன் சேர்த்து 29 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் இழப்புக்கு வழிவகுத்துள்ளது என்று CAG அறிக்கை கூறுகிறது.
2024 டிசம்பர் நிலவரப்படி, இந்திய வயர்லெஸ் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ முன்னணியில் உள்ளது. 465.13 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தில் உள்ளது. பாரதி ஏர்டெல் 385.3 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் இரண்டாவது இடத்திலும், வோடபோன் ஐடியா 207.25 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் மூன்றாவது இடத்திலும், பிஎஸ்என்எல் 91.72 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ 40.42% சந்தைப் பங்கைக் கொண்டு, 465.13 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் சந்தையில் முன்னணியில் உள்ளது. அதிவேக இணைய சேவைகள் மற்றும் கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலம் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது. இதன் மூலம், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் ரிலையன்ஸ் ஜியோ தனது இடத்தை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
பார்தி ஏர்டெல் 33.49% சந்தைப் பங்கைக் கொண்டு, 385.3 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. பரந்த அளவிலான நெட்வொர்க் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவையின் மூலம் பார்தி ஏர்டெல் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. மேலும், பல்வேறு வகையான திட்டங்களை வழங்குவதன் மூலம் பாரதி ஏர்டெல் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்கிறது.
வோடபோன் ஐடியா (Vi) 18.01% சந்தைப் பங்கைக் கொண்டு, 207.25 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களின் இணைப்பின் மூலம் உருவான வோடபோன் ஐடியா, சந்தையில் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், கடுமையான போட்டியின் காரணமாக வோடபோன் ஐடியா தனது வாடிக்கையாளர்களை தக்க வைப்பதில் சவால்களை எதிர்கொள்கிறது.
பிஎஸ்என்எல் 7.99% சந்தைப் பங்கைக் கொண்டு, 91.72 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது. அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், கிராமப்புறங்களில் தனது சேவைகளை விரிவுபடுத்தி வருகிறது. இருப்பினும், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டியிடுவதில் பிஎஸ்என்எல் சிரமங்களை எதிர்கொள்கிறது.
இந்திய வயர்லெஸ் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நான்கு முக்கிய நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், தக்க வைத்துக் கொள்ளவும் பல்வேறு உத்திகளை பின்பற்றுகின்றன. குறிப்பாக, அதிவேக இணைய சேவைகள், கவர்ச்சிகரமான திட்டங்கள் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவை மூலம் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. இருப்பினும், கடுமையான போட்டியின் காரணமாக, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர் தளத்தை தக்க வைப்பதில் சவால்களை எதிர்கொள்கின்றன.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications