கணவனை வாடகைக்கு விட்ட மனைவி.. அடபாவிகளா.. இப்படி கூடவா பண்ணுவாங்க..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாத சம்பளத்தை மட்டுமே நம்பயிருந்தால் கட்டாயம் போதாது என்பது தான் நிதர்சனமான உண்மை.

 

இதனால் உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் பணம் சம்பாதிக்கப் புதுப்புது வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர். இப்படித் தான் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவனை வாடகைக்கு விடுவதாக அறிவித்துத் தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளார்.

கணவனை மனைவி வாடகைக்கு விடுவதா..? என்ன கொடுமடா இது என்று நினைக்கும் அனைவருக்கும் ஸ்வீட் சர்ப்ரைஸ் உள்ளது.

3 பேருக்கும் சமமாக சொத்து வரும்.. எந்த பஞ்சாயத்தும் பண்ண கூடாது.. முகேஷ் அம்பானி ஆர்டர்?! 3 பேருக்கும் சமமாக சொத்து வரும்.. எந்த பஞ்சாயத்தும் பண்ண கூடாது.. முகேஷ் அம்பானி ஆர்டர்?!

பிரிட்டன்

பிரிட்டன்

பிரிட்டன் நாட்டில் விலைவாசி அதிகரித்து நடுத்தர மக்கள் மிகவும் மோசமான நிலையை எதிர்கொண்டு இருக்கும் வேளையில், நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு உதவித்தொகை கொடுத்து பணிக்கு வரவழைக்கும் சூழ்நிலை நிலவுகிறது.

தினசரி செலவுகள்

தினசரி செலவுகள்

இந்த நிலையில் மாத சம்பளத்தைத் தாண்டி தினசரி செலவுகளைச் சமாளிக்கக் கூடுதலா பணத்தைச் சம்பாதிக்கும் முயற்சியில் இருக்கும் போது லாரா யங் என்ற பெண் பாட்கேஸ்ட் கேட்டுக்கொண்டு இருக்கும் போது ஒரு ஐடியா தோன்றியது. அது தான் இந்த வைரலான விஷயத்திற்கு ஆரம்பக் காரணம்.

லாரா யங்

லாரா யங்

லாரா யங் கேட்டுக்கொண்டு இருந்த அந்தப் பாட்காஸ்ட் ஆடியோவில் ஒரு பெண், தான் புதிதாக ஒரு வீட்டுக்குச் சென்ற போது பக்கத்துவீட்டுக்காரர் தன்னுடைய பர்னிச்சர்களைச் செட் செய்ய உதவினார் என்று பேசியுள்ளார்.

மல்டி டேலென்ட் கணவன்
 

மல்டி டேலென்ட் கணவன்

இதையே அடிப்படையாக வைத்து லாரா யங் தனது மல்டி டேலென்ட் கணவனை மற்ற பெண்கள் அல்லது வீட்டில் செய்ய வேண்டிய வேலைக்கு உதவி செய்யத் தயார் என்று 'Hire my handy hubby' என்று விளம்பரம் செய்யத் துவங்கினார். லாரா யங்-ன் கணவர் ஜேம்ஸ் இவருக்குத் தெரியாத DIY வேலையே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

வீட்டு வேலை

வீட்டு வேலை

ஜேம்ஸ் பிரிட்டன் நாட்டில் பக்கிங்ஹாம்ஷயர் பகுதியில் தாங்கள் வசதி வரும் வீட்டில் பெட், கிட்சன், டைனிங் டேபிள் ஆகியவற்றை அடிப்படையில் இருந்து செய்து முடித்துள்ளார். மேலும் இவருக்குப் பெயின்டிங், டெக்கரேட்டிங், டைல்ஸ் பதிப்பது மற்றும் கார்பெட் அமைப்பது என வீட்டில் செய்ய வேண்டிய பெரும்பாலான பணிகள் இவருக்குத் தெரியும்.

Rent My Handy Husband சேவை

Rent My Handy Husband சேவை

அதை அடிப்படையாக வைத்து லாரா யங் "Rent My Handy Husband" என்ற பெயரில் இணையதளம் மட்டும் அல்லாமல் பேஸ்புக் மற்றும் நெக்ஸ்ட்டோர் போன்ற செயலிகளில் விளம்பரம் செய்துள்ளார்.

பக்கிங்ஹாம்ஷயர்

பக்கிங்ஹாம்ஷயர்

இந்த விளம்பரம் பக்கிங்ஹாம்ஷயர் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த பிரிட்டனிலும் சில நாட்களில் பிரபலம் அடைந்து தற்போது லாரா யங் மற்றும் ஜேம்ஸ் ஒரு செலிப்ரிட்டியாகவே மாறியுள்ளனர்.

கிண்டலும், கேளியும்

கிண்டலும், கேளியும்

இந்த விளம்பரம் வைரல் ஆன பின்பு பலர் ஜேம்ஸ்-ஐ கிண்டலும், கேளியும் செய்யாமல் உண்மையிலேயே வேலை செய்ய அழைத்துள்ளனர். ஆனால் சிலர் தவறாகவும் நினைத்துக்கொண்டு முதலில் அழுத்தாகவும் லாரா யங் கூறினார், ஆனால் விளம்பரம் வைரல் ஆனா பின்பு இதுபோன்ற தவறான அழைப்புகள் வருவது இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

வருமானம்

வருமானம்

மேலும் பலர் பில்டர்கள், நிறுவனங்களைக் காட்டிலும் ஜேம்ஸ் குறைவான கட்டணத்தை வசூலிப்பதால் அதிகப்படியான அழைப்புகள் அடுத்தடுத்து வருவதாக இந்த ஜோடி தெரிவித்துள்ளனர். இதனால் அதிகப்படியான பிஸ்னஸ் வருவதாகவும் கூறுகின்றனர். மேலும் இவர்கள் ஒரு பணிக்கு 35 பவுண்டு தொகை வாங்குவதாகத் தெரிகிறது.

ஜேம்ஸ்

ஜேம்ஸ்

ஜேம்ஸ் இதற்கு முன்பு ஒரு வேர்ஹவுஸ்-ல் இரவு நேரத்தில் பணிபுரிந்துள்ளார், ஆனால் 2 வருடத்திற்கு முன்பு வேலையை விட்டுவிட்டு தனது 3 பிள்ளைகளையும் கவனித்து வருகிறார். விலைவாசி உச்சத்தைத் தொட்டு இருக்கும் இந்த வேளையில் "Rent My Handy Husband" ஐடியா பெரிய அளவில் உதவி உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

 தாய் அங்கன்வாடி ஊழியர்.. மகனுக்கு ரூ.1.8 கோடி சம்பளம்.. ஓரே நேரத்தில் 3 நிறுவனத்தில் வேலை..! தாய் அங்கன்வாடி ஊழியர்.. மகனுக்கு ரூ.1.8 கோடி சம்பளம்.. ஓரே நேரத்தில் 3 நிறுவனத்தில் வேலை..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Buckinghamshire couple hire my handy husband service idea helps people who broke financially

Buckinghamshire couple hire my handy husband service idea helps people who broke financially கணவனை வாடகைக்கு விட்ட மனைவி.. எதற்காகத் தெரியுமா..?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X