மத்திய பட்ஜெட் 2020 LIVE: பட்ஜெட் அறிவிப்புகள்.. ப.சிதம்பரம் அதிருப்தி
டெல்லி: நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் தற்போது தொடங்கி நடந்து வருகிறது.
இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக இன்று காலை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் தொடங்கியது.
பொருளாதார மந்தநிலையை மேம்படுத்தும் அறிவிப்புகள், வேலைவாய்ப்பு, தங்க கையிருப்பு, பணமதிப்பு, வருமான வரிக் குறைப்பு,ஜிஎஸ்டி வரிக் குறைப்பு, வட்டிக் குறைப்பு, உள்ளிட்ட அறிவிப்புகள் இதில் வெளியாக வாய்ப்புள்ளது. பட்ஜெட் குறித்த கூடுதல் தகவலுக்கு இங்கே இணைந்திருங்கள்.
வரி விலக்குகளை விரும்புவோர் பழைய முறையை தேர்வு செய்யலாம்: நிதியமைச்சர்
எளிமைப்படுத்தப்பட்ட, குறைக்கப்பட்ட விகிதங்களை விரும்புவோர் புதிய முறையை ஏற்கலாம்
ஒரு வரியை செலுத்தாததன் மூலம் பணம் மக்களிடம் உள்ளதை உறுதிப்படுத்த விரும்பினோம்
வரி கட்டமைப்பை எளிதாக்கும் அளவுக்கு அதன் விகிதங்களைக் குறைப்பதே நோக்கம்: நிர்மலா
தமிழகத்திற்கு பயன் தரும் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை - கே.எஸ்.அழகிரி
மத்திய பட்ஜெட்டை வார்த்தை ஜாலங்களால் சம்ர்பித்துள்ளார் நிர்மலா - கே.எஸ்.அழகிரி
நிதி பற்றாக்குறை 3.8 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக குறையும்: நிர்மலா சீதாராமன்
அனைத்து வருமான வரி விலக்குகளையும் நீக்க அரசு விருப்பம்: நிர்மலா சீதாராமன்
வருமான வரி விலக்குகளை நீண்ட காலத்திற்கு நீக்க அரசு விரும்புகிறது: நிர்மலா சீதாராமன்
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு
புதிய வருமான வரி விதிப்பு காரணமாக எல்ஐசி உட்பட பல காப்பீட்டு நிறுவனங்களின் பங்குகளில் வீழ்ச்சி
பட்ஜெட் உரையை சமர்ப்பித்ததும் லோக்சபா அமர்வு திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு
பட்ஜெட் உரையை முழுமையாக வாசிக்க முடியாமல் சமர்ப்பித்தார் நிர்மலா
சோர்வடைந்த நிர்மலா சீதாராமன்
பட்ஜெட் உரையை தொடர்ந்து 2.45 மணிநேரமாக வாசித்து வருகிறார் நிர்மலா சீதாராமன்.
தொடர்ச்சியாக உரையாற்றுவதால் சோர்வடைந்து காணப்படுகிறார் நிர்மலா சீதாராமன்.
நிர்மலா சீதாராமனால் தொடர்ந்து பட்ஜெட் உரையை வாசிக்க முடியாமல் திணறல்.
பான் கார்டு விண்ணப்பங்களை இனி நிரப்ப தேவையில்லை, ஆதார் எண் அடிப்படையில் ஆன்லைன் முறையில் விரைந்து பான் கார்டு வழங்கப்படும்- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
100 கோடி வரை ஆண்டு வர்த்தகம் செய்வோருக்கு லாபத்தின் மீது 100% வரி விலக்கு- நிர்மலா சீதாராமன்
குறைந்த விலை வீட்டுத் திட்டங்களை ஊக்குவிப்பதற்காக, வரி விடுமுறையை இன்னும் ஒரு வருடம் நீட்டிக்க முன்மொழிகிறேன்- நிர்மலா சீதாராமன்
தனி நபர் வருமான வரியில் நிறைய சலுகைகள் தரப்படுகின்றன, வருமான வரி மேலும் குறைக்கப்படும். ஆண்டுக்கு, 5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோர் இனி 10 சதவீதம் வருமான வரி செலுத்தினால் போதும். தற்போது இது 20 சதவீதமாக உள்ளது. 7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சமாக இருந்தால் 15 சதவீதம் வரி செலுத்தினால் போதும், 10 லட்சம் முதல் 12.50 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு தற்போது 30 சதவீதமாக உள்ளது, இனிமேல் அது 20 சதவீதமாக குறைக்கப்படும். 12.50 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோருக்கு இனி 25 சதவீதம் வரி விதிக்கப்படும், 15 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு 30 சதவீதம் வரி வசூலிக்கப்படும் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
2020-21ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10%மாக இருக்கும் என நிர்மலா சீதாராமன் அறிவிப்பு, அரசின் நிதிப் பற்றாக்குறை 3.5 சதவீதமாக இருக்கும்
எல்ஐசியில் உள்ள பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய அரசு முடிவு, பங்குச் சந்தையில் எல்ஐசி நிறுவனம் பட்டியலிடப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
கெசட் அல்லாத பதவிகளுக்கு பணியாளர் நியமனம் செய்வதற்கு பொதுவான ஆன்லைன் தகுதி சோதனைகளை நடத்துவதற்கு தேசிய பணியாளர் தேர்வு அமைப்பு அமைக்கப்பட உள்ளது- நிர்மலா சீதாராமன்
ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்கு ரூ .30,757 கோடி ஒதுக்கீடு செய்வதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
வங்கி டெபாசிட் மீதான காப்பீடு தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது, தற்போது காப்பீடு தொகை ரூ.1 லட்சமாக உள்ளது.வங்கிகள் திவாலானால் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு கிடைக்கும்
சமீபத்தில் உருவாக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்திற்கு ரூ.5058 கோடி ஒதுக்கீடு- நிர்மலா சீதாராமன்
2022ம் ஆண்டு ஜி-20 மாநாடு இந்தியாவில் நடத்தப்படும், மாநாட்டுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு
திருக்குறளை சொல்லி மோடியை மாமன்னர் என்ற நிர்மலா, கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக, தேசிய எதிர்க்கட்சிகள்
நாட்டின் கஜானாவுக்கு பங்களிப்பு தருவோர் மதிக்கப்பட வேண்டும், வரி செலுத்துவோர் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது - நிர்மலா சீதாராமன்
காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்த நடவடிக்கையின் கீழ் இந்தியா அர்ப்பணிப்புடன் செயல்படும். 2021 ஜனவரி 1 முதல் இதற்கான பணிகள் தொடங்கும். அதிக காற்று மாசு ஏற்படுத்தும் மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்படும். அந்த நிலம் பிற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும். மாநில அரசுகளுடன் இணைந்து சுற்றுச்சூழலை சீர்படுத்த ரூ .4,400 கோடி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்
திருக்குறளில் கூறியுள்ளபடி சிறப்பான ஆட்சியை மோடி அரசு நடத்தி வருவதாக நிர்மலா சீதாராமன் புகழாரம்
"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து" என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி நிர்மலா சீதாராமன் உரை
ஆதிச்சநல்லூர் முக்கியத்துவம்
ஆதிச்சநல்லூர் உட்பட நாடு முழுக்க 5 தொல்பொருள் தளங்கள் மேம்படுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.இந்த 5 இடங்களிலும் சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகங்கள் உருவாக்கப்படும்
மனிதக் கழிவை மனிதனே அகற்றக்கூடாது.
மனித கழிவை மனிதனே அகற்றுவதை தடுக்க திட்டம் வகுக்கப்பட்டு புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் - நிர்மலா சீதாராமன்.
பழங்குடியினர் நலனுக்கு இந்த பட்ஜெட்டில் 53 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு
பேட்டி பச்சாவ் பேட்டி படாவ் திட்டம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது, பள்ளிகளில் சேரும் பெண் குழந்தைகள் எண்ணிக்கை, ஆண் குழந்தைகள் எண்ணிக்கையைவிட அதிகம்- நிர்மலா சீதாராமன்
நாடு முழுக்க டேட்டா சென்டர் பார்க்களை உருவாக்க தனியார் துறைக்கு ஊக்கமளிக்கும் புதிய கொள்கை விரைவில் கொண்டு வரப்படும்- நிர்மலா சீதாராமன்
டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் 2023க்குள் முடிக்கப்படும்- நிர்மலா சீதாராமன்
பெங்களூரு நகரில் 18,600 கோடி செலவில் புற நகர் ரயில் திட்டம் அறிமுகம் செய்யப்படும், ரயில் பாதைகளை மின்மயமாக்க ரூ.27,000 கோடி ஒதுக்கீடு- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் விரைவில் அறிமுகம்- நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு
திறன் இந்தியா திட்டத்திற்கு ரூ .3,000 கோடி ஒதுக்கீடு
ஆசிரியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் பராமரிப்பு பணியாளர்களுக்கு வெளிநாட்டில் பெரும் தேவை உள்ளது. அவர்களின் திறன்கள் தேவைக்கு ஏற்ப பொருந்தவில்லை, எனவே திறன் மேம்பாட்டுக்கு அரசு ரூ .3000 கோடியை முன்மொழிகிறது- நிர்மலா சீதாராமன்
விரைவில் புதிய கல்விக் கொள்கை
வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும், பட்டப்படிப்பு அளவிலான ஆன்லைன் ப்ரோக்ராம் அறிமுகம் செய்யப்படும்- நிர்மலா சீதாராமன்
சுகாதாரத் துறைக்கு 69,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
விவசாயத்துறை ஊக்கத்திற்கு 16 அம்ச திட்டங்களை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்
விவசாயிகள் வருமானம் இரட்டிப்பு
2022 ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும். 2025-ஆம் ஆண்டுக்குள் பால் உற்பத்தியை இரண்டு மடங்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது- நிர்மலா சீதாராமன்
விமானத்தில் பறக்கும் காய்கறிகள்
விரைவில் அளிக்கக்கூடிய காய்கறி பழங்கள் நுகர்வோரை விரைவில் சென்றடைய கிருஷி உடான் என்ற புதிய திட்டத்தின் மூலம் தேசிய மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து மூலம் விவசாய பொருட்களை எடுத்துச் செல்ல வசதி ஏற்படுத்தப்படும் - நிர்மலா சீதாராமன்
பால், பழங்கள், காய்கறிகளைக் கொண்டு செல்ல தனி ரயில்கள் இயக்கப்படும் - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
ஔவையார் எழுதிய ஆத்திச் சூடி குறித்து பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார் நிர்மலா சீதாராமன், 'பூமி திருத்தி உண்' என ஆத்திச்சூடியில் ஔவையார் குறிப்பிட்டுள்ளார்
பட்ஜெட் 2020ன் மூன்று முக்கிய அம்சங்கள்: 1. இந்தியாவின் விருப்பம், 2. பொருளாதார வளர்ச்சி 3. அக்கறையுள்ள சமூகம்: நிர்மலா சீதாராமன் உரை
ஜிஎஸ்டி போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக் துறையில் செயல்திறனை அதிகரித்து, இன்ஸ்பெக்டர் ராஜ் நிலையை அகற்றியது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) பயனளித்துள்ளது. ஜிஎஸ்டியால் நுகர்வோருக்கு ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் நன்மை கிடைத்துள்ளது- நிர்மலா சீதாராமன்
ஜிஎஸ்டி வரி விதிப்பு நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க பொருளாதார சீர்திருத்தம் - நிர்மலா சீதாராமன்
தலித் & பழங்குடியினத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு பெண்களுக்கும், சமூகத்தின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த ஒவ்வொரு நபருக்கும், இந்த பட்ஜெட் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவதாக அமையும்- நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யத் தொடங்கியதும் 85 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்
கடந்த ஆண்டு சிவப்பு நிற சேலையில் வந்த நிர்மலா சீதாராமன், இந்த ஆண்டு மஞ்சள் நிற சேலையில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்
மக்களின் வருமானத்தை உயர்த்தி வாங்கும் திறனை அதிகரிக்கச் செய்யும் பட்ஜெட்டாக அமையும்- நிர்மலா சீதாராமன்
துவங்கியது பட்ஜெட் தாக்கல்
லோக்சபாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார்
2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்கு, மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
நாடாளுமன்றத்திற்கு மோடி வருகை:
பட்ஜெட் தாக்கலாக உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்திற்கு வந்தடைந்தனர்
பட்ஜெட் தாக்கல் செய்வதை பார்ப்பதற்காக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் பரகலா வாங்மயி உள்ளிட்ட குடும்பத்தார் நாடாளுமன்றத்திற்கு வருகை
நாடாளுமன்றம் வந்தார் நிர்மலா:
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் நாடாளுமன்றம் வருகை
அச்சடிக்கப்பட்ட பட்ஜெட் உரை பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றம் வந்து சேர்ந்தது
பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு வீட்டில் பிரார்த்தனை செய்த மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர்
இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப் போகும் முதல் பெண் என்கிற சாதனையைப் படைக்க இருக்கிறார் நிர்மலா சீதாராமன்; 2019 ஜூலையில் முதல் முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார்
முன்னதாக 2015ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி சனிக்கிழமை, முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட்டைத் தாக்கல் செய்த போதும் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை திறந்து இருந்தது
பொதுவாக சனிக்கிழமைகளில் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை விடப்படும் நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி பங்குச் சந்தைகளும் திறந்து இருக்கின்றன
பட்ஜெட் தாக்கல் செய்வதை முன்னிட்டு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்துடன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
வருமான வரி வரம்பு ரூ. 7 லட்சமாக உயர்த்தப்படுமா? என எதிர்பார்ப்பு
பட்ஜெட் தாக்கலாக உள்ள நிலையில், சென்செக்ஸ் 140 புள்ளிகள் குறைந்து 40,576 ஆக உள்ளது; நிஃப்டி 11,910, 126.50 புள்ளிகள் குறைந்துள்ளது
பங்கு சந்தைகள் சரிவுடன் தொடங்கின
2020-21 பட்ஜெட் தாக்கல் முன்னிட்டு இன்று காலை 10.15 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை. இன்று காலை பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் நாடாளுமன்றம் வருகை
பொருளாதார மந்த நிலை நிலவும் நிலையில் பட்ஜெட் அதிக கவனம் பெறுகிறது.
பொருளாதார மந்தநிலையை மேம்படுத்தும் அறிவிப்புகள்,வேலைவாய்ப்பு, தங்க கையிருப்பு, பணமதிப்பு, வருமான வரிக் குறைப்பு,ஜிஎஸ்டி வரிக் குறைப்பு, வட்டிக் குறைப்பு, வீட்டு வசதித் திட்டம்,வருமான வரிச் சலுகைகள் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.
இதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நிறைய சலுகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. வருமான வரி குறித்த முக்கிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய பட்ஜெட் 2020 இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.காலை 11க்கு நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமனால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்
பொருளாதார மந்தநிலையை மேம்படுத்தும் அறிவிப்புகள், வேலைவாய்ப்பு, தங்க கையிருப்பு, பணமதிப்பு, வருமான வரிக் குறைப்பு, ஜிஎஸ்டி வரிக் குறைப்பு, வட்டிக் குறைப்பு, வீட்டு வசதித் திட்டம், வருமான வரிச் சலுகைகள் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது
காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமனால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டின் பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்கிறார்
Share This Article
English summary
Budget 2020 LIVE UPDATES: Finance Minister Nirmala will launch the budget
Budget 2020 LIVE UPDATES: Finance Minister Nirmala Sitharaman will launch the budget.
Story first published: Saturday, February 1, 2020, 17:02 [IST]