பட்ஜெட் 2020: மோடி அரசின் முன்பு நிற்கும் 3 முக்கிய சவால்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: முதலீட்டாளர், வணிகம் மற்றும் நுகர்வோர் நம்பிக்கையை மீண்டும் பெற உதவும் பட்ஜெட்டை முன்வைப்பதே மோடி அரசின், முன் நிற்கும், மூன்று முக்கிய சவால்கள் என்று கர்மா கேபிடல் மேனேஜ்மென்ட் நிறுவனர் நந்திதா பார்க்கர் தெரிவித்துள்ளார்.

 

மத்திய அரசின் பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி, தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு, நந்திதா பார்க்கர் அளித்துள்ள பேட்டியில் இத்கவல்களை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதை பாருங்கள்: வளர்ந்து வரும் நிலையில், மார்க்கெட்டை ஈர்ப்பதில், இந்தியா முதலிடத்தில் இருந்தது. இன்று அது தொலைதூர நிலை போல் தோன்றினாலும், அந்த முதலிடத்தை மீண்டும் பெறுவதற்கு அரசு நினைத்தால், நிறைய செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன்,

ஜீ என்டர்டெய்ன்மென்டுக்கு என்ன ஆச்சு.. ஏன் இந்த வீழ்ச்சி.. கதறும் நிர்வாகம்..!

வரி விதிப்பு

வரி விதிப்பு

வரிவிதிப்பு, ஒழுங்குமுறை, அதிக கட்டுப்பாடு, மைக்ரோ மேனேஜ்மென்ட் பற்றிய பிரச்சினைகளை தவிர, வணிகர்களுக்கு, செலுத்த வேண்டிய நிலுவைகளை செலுத்த வேண்டும். மத்திய அரசு மாநிலங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளை, செலுத்த வேண்டும். மேலும் மாநில அரசுகள், விற்பனையாளர்கள், சப்ளையர்கள், ஒப்பந்தக்காரர்கள் ஆகியோருக்கு நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும்.

மூலதன ஆதாய வரி

மூலதன ஆதாய வரி

முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, வெளிநாட்டு மூலதன முதலீடுகளுக்கு இது ஒரு தடையாக செயல்படுவதால் நீண்டகால மூலதன ஆதாய வரியை நீக்க வேண்டும். இது உலக விதிமுறைகளுக்கு ஏற்ப இந்தியாவை கொண்டு வரும்.

புது வேலைவாய்ப்புகள்
 

புது வேலைவாய்ப்புகள்

இரண்டாவது பெரிய விஷயம் என்னவென்றால், வெளிநாட்டு நிதிகளை இந்தியாவுக்கு நகர்த்துவதற்கும், இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கும் அனுமதிப்பதாகும். 100,000 புதிய வேலைவாய்ப்புகளை இது உருவாக்கும். அரசாங்கத்திற்கு பில்லியன் கணக்கான டாலர் வரி வருவாயை உருவாக்கவும் உதவும்.

விலை உயர்வு

விலை உயர்வு

முந்தைய ஆண்டின் இறுதியில் காணப்பட்ட சிறிய மற்றும் மிட்-கேப் பங்குகளின் மீட்பு இந்த ஆண்டு தொடர்கிறது. இந்த போக்கு ஆண்டு முழுவதும் தொடரும் வாய்ப்புள்ளது. அதிக தொலைத் தொடர்பு கட்டணங்கள் மற்றும் எஃகு தயாரிப்பாளர்களாக பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றின் மூலம் மீட்புகளால் வருவாய் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு நந்திதா பார்க்கர் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2020: Triple challenge for Modi government, says Nandita Parker

The triple challenge before the government is to present a budget that will help regain investor, business and consumer confidence, according to Nandita Parker, founder of Karma Capital Management.
Story first published: Wednesday, January 22, 2020, 10:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X