டெல்லி: அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் பல்வேறு அம்சங்களுடன் பல அறிவிப்புகளை வெளியட்டுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அந்த வகையில் நாம் தற்போது பார்க்கவிருப்பது, இந்தியாவின் முக்கிய பிரச்சனையான நிதி பற்றாக்குறை பற்றி தான், குறிப்பாக நடப்பு நிதியாண்டில் நிதிபற்றாக்குறை 9.50% ஆகவும், அடுத்த நிதியாண்டில் 6.68% ஆக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக நடப்பு நிதியாண்டில் அரசின் செலவினங்கள் 34.5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதே நடப்பு நிதியாண்டில் அரசின் மூலதன செலவு 4.39 லட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கும்.
இதே அடுத்த 2022ம் நிதியாண்டில் அரசின் செலவினங்கள் 34.83 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆக இதனை சமாளிக்க அரசு சந்தைகளில் இருந்து 12 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற முடிவு செய்யதுள்ளதாகவும் தனது பட்ஜெட் அறிக்கையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
உண்மையில் ஒரு நாட்டின் செலவினங்கள் அதிகரிக்கும் போது தான் தேவை அதிகரிக்கும் என்று நாம் முன்னதாக பல கட்டுரைகளில் படித்திருக்கிறோம். ஆக இந்த பட்ஜெட்டில் அரசு தேவையை மீட்டுக் கொண்டு வருவதற்காக செலவினங்களை அதிகரிக்க வேண்டும். இது அரசுக்கு முக்கிய சவலாக இருக்கும் என்றும் கூறியிருந்தோம். இந்த நிலையில் செலவினங்கள் அதிகரிக்க அரசு திட்டமிட்டிருப்பது மிக நல்ல விஷயமே. உண்மையில் இது செலவினங்களை அதிகரிக்கும் போது, இது தேவையை மீட்டுக் கொண்டு வரும். இது பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுக்கும்.
கடந்த ஆண்டில் தான் கொரோனா பாதிப்பின் காரணமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் வெகுவாக குறைந்தது. ஆனால் நடப்பு நிதியாண்டில் தடுப்பூசிகள் விரைவில் அமலுக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் விகிதம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது சிறந்த உதாரணம் ஜனவரி மாத ஜிஎஸ்டி வரி வசூல் விகிதம். ஏனெனில் நடப்பு நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவு உச்சம் தொட்டது தான். ஆக அரசின் இந்த இலக்கு ஒரு புறம் அதிமாக இருந்தாலும், இது வரவிருக்கும் ஆண்டில் குறையும் என்பது நல்ல விஷயம் தானே.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications