டெல்லி: பலத்த எதிர்பார்ப்புகளுக்கும், சவால்களுக்கும் மத்தியில், ஒரு கடினமான காலகட்டத்தில் இன்று தனது மூன்றாவது பட்ஜெட்டினை நிதிமையச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.
Recommended Video

மத்திய அரசுக்கு ஒரு சவால் மிகுந்த ஆண்டாக இருக்கும். ஏனெனில் கடந்த ஆண்டில் கொரோனா காரணமாக, பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த லாக்டவுன் மக்களை மட்டும் அல்ல, பொருளாதாரத்தினையும் பதம் பார்த்தது. இதனால் இன்று பட்ஜெட்டில் பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது.

இந்த நிலையில் எதிர்கட்சிகளின் அமளிக்கு மத்தியிலும் தனது பட்ஜெட் அறிக்கையினை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியில் தனது பட்ஜெட்டை தாக்கல் செய்யப்படுகிறது. தற்போது சர்வதேச பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நிலவி வருகின்றது என்று கூறிய நிதிமையமச்சர் கொரோனாவுக்கு எதிரான இந்தியா மட்டுமே இரு தடுப்பூசிகளை கொண்டு வந்துள்ளது. கொரோனாவிலிருந்து பொருளாதாரத்தினை மீட்டெடுக்க இந்தியா 3 - 4 மினி பட்ஜெட்டுகளைக் கொண்டு வந்துள்ளது. அதோடு கொரோனாவிலிருந்து மீட்டெடுக்க அரசு ஜிடிபியில் 13% கொடுத்துள்ளது. அதாவது அரசு மற்றும் ஆர்பிஐ இணைந்து 27.1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத் தொகைகள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக ஆத்ம நிர்பார் ஊக்கத்தொகைகள் இந்தியாவின் விகிதத்தினை வளர்ச்சி பாதைக்கு துரிதப்படுத்தின என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications