கடந்த ஆண்டில் தங்கத்தினை விட அதிக லாபம் கொடுத்தது பிட்காயின் தான். உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியாக இருக்கும் பிட்காயின், கடந்த ஆண்டில் மட்டும் 313% வளர்ச்சி கண்டுள்ளது.
இதே நடப்பு ஆண்டில் இதுவரை இல்லாத அளவான 42,000 டாலர்களையும் ஜனவரி தொடக்கத்தில் தொட்டது. எனினும் இது தற்போது பலத்த சரிவினைக் கண்டுள்ளது.
இந்த வீழ்ச்சியானது எதிர்பார்த்த வீழ்ச்சியினை விட அதிகம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இது ஒரு விலை திருத்தமாக இருக்கலாம். எனினும் இது ஒரு ஆரோக்கியமான பின்னடைவு என்றும், இது நீண்டகால நோக்கில் நிலைத்தன்மையை வழங்கும் என்றும் கூறியுள்ளனர்.
வணிகம் ஊக்குவிக்கப்படவில்லை
கிரிப்டோ கரன்சியானது வங்கி சார்ந்த பணப்பரிவர்த்தனைகளுக்கு நேரெதிரான மற்றும் முற்றிலும் இணையம் சார்ந்த மின்னணு பணப்பரிவர்த்தனையானவையாகவே உள்ளது. இன்று உலகம் முழுவதும் பல நாடுகளில் பயன்பாட்டிலுள்ளது. இந்தியாவில் சட்டரீதியாக பிட்காயின் தடை செய்யப்படவில்லை. ஆனால் இங்கு பிட்காயின் வணிகம் இங்கே ஊக்குவிக்கப்படுவதில்லை.
ஆர்வம் அதிகரிப்பு
எனினும் தற்போது பிட்காயின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக வரவிருக்கும் பட்ஜெட்டில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதற்காக விதிமுறைகளில் மாற்றம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்று மக்களை மோசடியில் இருந்து பாதுகாப்பது மற்றும் வளர்ச்சியினை ஊக்குவிப்பது என அரசின் இரட்டை இலக்காக உள்ளது.
உலகத்தரம் வாய்ந்த கொள்கைகள்
குறிப்பாக நம்மிடம் உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பு, KYC மற்றும் AML கொள்கைகள் உள்ளன. ஆக இதுபோலவே கிரிப்டோகரன்சி வர்த்தகர்களுக்கும் ஆரோக்கியமான விதிமுறைகளை கொண்டு வரும் என்று நாங்கள் நம்புகிறோம் என நிதி வல்லுனர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் நிபுணர்கள் 2030க்குள் பிட்காயின் 1 கோடியை எட்டும் என்றும் கூறியுள்ளனர்.
நிபுணர்கள் பரிந்துரை
பிட்காயின் பணவீக்கத்தின் ஆதரமாக தங்கத்தினை போலவே உருவாக்கப்பட்டுள்ளது.மேலும் இது ஒரு நிலையான வினியோகத்தினை கொண்டுள்ளது. மத்தி வங்கியோ பிற நிறுவனங்களோ இந்த பிட்காயினை டாலர்களை போலவும், ரூபாயினை போலவும் அதிக பிட்காயின் களை அச்சிட முடியாது. இது புதியது என்பதால், தற்போது நிலையற்றதாக இருந்தாலும், சில வல்லுனர்கள் நிலையற்ற தன்மையிலிருந்து பாதுகாக்க எஸ்ஐபி முறையை போலவே, ஒரு சிறிய தொகையை தொடர்ந்து முதலீடு செய்ய பரிந்துரைக்கின்றனர்.


Click it and Unblock the Notifications