பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட் அறிக்கை இந்திய வரலாற்றில் இதுவரை யாரும் செய்திடாத வகையில் இருக்கும் எனச் சில நாட்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் கூறினார்.
இதற்கு ஏற்றார் போல் தற்போது சுதந்திர இந்தியாவில் முதல் முறையாகப் பட்ஜெட் அறிக்கை பிரிண்ட்ங் செய்யப்படாமல் டிஜிட்டல் முறையில் விநியோகம் செய்யப்பட உள்ளது.
கொரோனா தொற்று
கொரோனா தொற்று இந்தியாவில் இன்னும் முழுமையாகக் கட்டுப்படுத்தாத நிலையில் இந்த முறை பட்ஜெட் தாக்கலும், பட்ஜெட் கூட்டத்தொடரும் பல்வேறு கட்டுப்பாடுகள் உடன் நடக்க உள்ளது. இதன் ஒரு பகுதியாகத் தொற்றுக் காரணமாகப் பட்ஜெட் அறிக்கை பிரிண்ட் செய்யப்படாமல் பேப்பர்லெஸ் முறையில் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சுதந்திர இந்தியா
இந்திய சுதந்திரம் அடைந்து முதல் முறையாகப் பட்ஜெட் அறிக்கை பிரிண்ட் செய்யப்படாமல் தாக்கல் செய்யப்பட உள்ளது, மத்திய நிதியமைச்சகத்தின் இந்த முடிவிற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
14 நாட்கள்
பட்ஜெட் அறிக்கை பிரிண்ட் செய்யப்படுவதற்குப் பலர் ஓரே இடத்தில் ஒன்று சேர்ந்து கிட்டதட்ட 14 நாட்கள் பணியாற்ற வேண்டிய இக்கட்டான சூழ்நிலை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு நிதியமைச்சகம் அறிக்கையைப் பிரிண்ட் செய்யவேண்டாம் என முடிவு செய்துள்ளது.
அல்வா தயாரிக்கும் நிகழ்வு
இதேபோல் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாக அல்வா செய்யும் வழக்கத்தையும் இந்த ஆண்டுக் கடைப்படிக்கப் போவது இல்லை எனவும் தெரிகிறது. பொதுவாக இந்த அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி ஜனவரி 20ஆம் தேதி பட்ஜெட் தயாரிப்பில் ஈடுப்பட்ட அனைத்து அதிகாரிகளும் ஒன்று சேர்ந்து தயாரிக்கப்படும்.
பிரிண்டிங் பணி துவங்கும்
இந்த நிகழ்ச்சிக்குப் பின்பு தான் பட்ஜெட் அறிக்கை தயாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரிண்டிங் பணியில் ஈடுபடுபவர்கள் பட்ஜெட் தாக்கல் செய்யும் வரையில் அதே இடத்தில் தங்க வேண்டும், வெளியில் வர முடியாது. இதுமட்டும் அல்லாமல் குறிப்பிட உயர் அதிகாரிகள் மட்டுமே பிரிண்ட் அறைக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படுவது வழக்கம்.
இப்படிப் பல்வேறு இடையூறுகள் இருக்கும் காரணத்தால் பிரிண்டிங் செய்யும் பணி முழுமையாகத் தவிர்க்கப்பட உள்ளது.
பல மாற்றங்கள்
சுதந்திர இந்தியாவில் முதல் முறையாகப் பிரிண்டிங் செய்யப்படுவது தவிர்க்கப்படும் நிலையில், மோடி ஆட்சியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாள் மாற்றப்பட்டது மறக்க முடியாது. இதுமட்டும் அல்லாமல் கடந்த வருடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல் முறையாகப் பட்ஜெட் அறிக்கையைச் சூட்கேஸ்-ல் கொண்டு வரும் வழக்கத்தை மாற்றிச் சிவப்புத் துணியில் சுற்றிக்கொண்டு வந்தார்.


Click it and Unblock the Notifications