எல்ஐசி பங்கு விற்பனை.. தனியார்மயமாகும் PSUs.. 2022ம் நிதியாண்டில் ரூ.1.75 லட்சம் கோடி இலக்கு..!

பலமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தனது பட்ஜெட்டினை தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பல்வேறு அறிவிப்புகளை பற்றி அறிவித்துள்ள நிதியமைச்சர், பொதுத்துறை வங்கிகளின் பங்கு விற்பனை, பொதுபங்கு வெளியீடுகள் பற்றிய முக்கிய அறிவிப்பினையும் வெளியிட்டு வருகின்றது.

குறிப்பாக நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசியின் பொது பங்கு வெளியீட்டிற்கான பணிகள் இந்த ஆண்டில் முடிவடையும். நிலுவையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையும் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிறுவனங்களின் பங்கு விற்பனை

இந்த நிறுவனங்களின் பங்கு விற்பனை

குறிப்பாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், ஏர் இந்தியா, SCI,CCI, IDBI, BEML, Pawan Hans, CONCOR, IDBI, உள்ளிட்ட சில நிறுவனங்களின் பங்கு விற்பனை விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் தனது பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

நிதி திரட்ட இலக்கு

நிதி திரட்ட இலக்கு

அதுமட்டும் இவ்வாறு தனியார்மயமாக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களின் மூலமும், பங்கு விற்பனை மூலமும் 1.75 லட்சம் கோடி ரூபாப் நிதி திரட்ட இலக்கு வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் இதே போன்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனாவினால் அது சாத்தியமாகமல் போனது. இந்த நிலையில் வரவிருக்கும் நிதியாண்டில் இது குறித்தான நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார்மயமாகும் வங்கிகள்

தனியார்மயமாகும் வங்கிகள்

மேலும் ஐடிபிஐ  போலவே, இரண்டு வங்கிகளின் பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.  இது குறித்தான அறிவிப்புகள் விரைவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பல வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் இரண்டு வங்கிகள் தனியார்மயம் என்பது சற்றே வங்கித் துறைக்கு பின்னடைவை கொடுத்துள்ளது.

 

பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்

பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்

அதோடு இன்னும் சில புதிய பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை செய்யப்படும் என்றும், இந்த நிறுவனங்களின் பட்டியல் விரைவில் அறிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சில நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் தனியார்மயமாக்கப்படும் நிலையில், இன்னும் சில நிறுவனங்கள் பட்டியிலிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது இன்னும் எந்தெந்த நிறுவனங்கள் இந்த லிஸ்டில் சேரவுள்ளவோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+