பலத்த எதிர்பார்புகளுக்கும் மத்தியில் தனது மூன்றாவது பட்ஜெட்டினை தாக்கல் செய்து வருகின்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
குறிப்பாக ஆட்டோமொபல் துறையினரின் பல வருட எதிர்பார்ப்பான ஸ்கிராப்பேஜ் பாலிசி பற்றிய அறிவிப்பினைக் கொடுத்துள்ளது.
இது உண்மையில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள ஆட்டோமொபைல் துறையினருக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும். இது பழைய வாகனங்களை சந்தையை விட்டு அகற்ற உதவும். இது புதிய வாகனங்களுக்கான தேவையை அதிகரிக்கும்.
ஸ்கிராப்பேஜ் திட்டம்
இது குறித்து விரைவில் நிதியமைச்சர் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக voluntary vehicle scrapping policy அறிமுகப்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், தனி நபர் வாகனங்களுக்கு 20 வருடங்கள் கழித்தும், வர்த்தக வாகனங்கள் 15 ஆண்டுகள் கழித்தும் ஸ்கிராப்பிங் செய்யும் திட்டம் கொண்டு வரப்படலாம் என்றும் தெரிகிறது.
வாகனத் துறைக்கு ஊக்கம்
உண்மையில் இந்த திட்டம் அமலுக்கு வரும்போது, இது வாகனத்துறைக்கு பெரிய ஊக்கத்தினை கொடுக்கும். ஏனெனில் இதனால் வாகனங்களின் தேவை அதிகரிக்கும். குறிப்பாக புதிய வாகனங்கள் மேலான ஆர்வம் அதிகரிக்கும். இதனால் புதிய வாகனங்களுக்கான தேவையும் கூடும். அதோடு சுற்று சூழல் பாதிப்பும் இதனால் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பழைய வாகனங்களுக்கு பசுமை வரி
ஏற்கனவே பழைய வாகனங்களுக்கான வாகன விதிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் மாறவுள்ளதாக கடந்த வாரத்தில் கூறப்பட்டது. இந்த நிலையில், எட்டு வருடங்கள் பழமையான போக்குவரத்து வாகனங்களின் தகுதி சான்றிதழ் புதுப்பிக்கப்படுகையில், சாலை வரியில் 10 முதல் 25 சதவீதம், பசுமை வரியாகப் விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. இதே தனியார் வாகனங்கள் 15 வருடங்களுக்குப் பிறகு பதிவு சான்றிதழை புதுப்பிக்கும்போது இந்த பசுமை வரி விதிக்கப்படும்.
சில நகரங்களில் அதிக வரி
அதோடு 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களின் பதிவை ரத்து செய்வதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு குறிப்பாக அதிகம் மாசடைந்த நகரங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு அதிகப்படியான பசுமை வரி (சாலை வரியில் 50%) விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக இதோடு இந்த ஸ்கிராப்பேஜ் பாலிசியும், துவண்டு போன வாகனத் துறையை மீட்டெடுக்க உதவும்.
ஆக இந்த பட்ஜெட் 2021 என்பது ஆட்டோமொபைல் துறையினருக்கு எதிர்பார்ப்பினை போலவே மிகப்பெரிய ரீலிப்பினை வழங்கியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications