டெல்லி: பட்ஜெட் 2021ல் சில பொருட்களின் மீது அரசு வரி சலுகையை வழங்கியுள்ளது. இதனால் சில பொருட்களின் விலையானது குறைய வாய்ப்புள்ளது.
வரலாற்றில் இல்லாத நிகழ்வாக முதல் காகிதமில்லாத பட்ஜெட்டாக இருந்தது. இது பட்ஜெட்டின் மற்றொரு சிறந்த அம்சமாகவே பார்க்கப்படுகிறது.
அதெல்லாம் சரி என்னென்ன பொருட்களுக்கு விலை குறைய வாய்ப்புள்ளது? என்னென்ன பொருட்கள் விலை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம், வாருங்கள் பார்க்கலாம்.
இவையெல்லாம் விலை குறையலாம்
- குறிப்பாக இரும்பு, தகரம், நைலாண் துணிகள், காப்பர் பொருட்கள் மின்சாரம், இரும்பு பொருட்கள், தங்கம், வெள்ளி, இன்சூரன்ஸ் உள்ளிட்டவை விலை குறைய வாய்ப்புகள் அதிகம்.
- குறிப்பாக காப்பர் பொருட்களுக்கு வரி விகிதம் 5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
- ஸ்டீலுக்கு சுங்க வரி விகிதம் 7.5% ஆக குறையும்.
- இதே Naptha-வுக்கு 2.5% ஆக சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது.
- இதே சுரங்க இயந்திரம் (tunnel boring machine)க்கு சுங்க வரி 7.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
- நைலான் துணிகளுக்கு 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இவையெல்லாம் விலை அதிகரிக்கலாம்
இதே எலக்ட்ரானிக்ஸ், பொருட்கள், மொபைல், சார்ஜர்கள், இறக்குமதி செய்யப்படும் துணிகள், இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்கள், குறிப்பாக crude palm oil, சோயாபீன் (crude soyabean) மற்றும் சன்பிளவர் ஆயில், ஆப்பிள், நிலக்கரி, லிக்னைட், கரிகள், யூரியா போன்ற குறிப்பிட்ட உரங்கள்,பட்டாணி, வெள்ளை கொண்டக்கடலை, இது தவிர சில பருப்பு வகைகள், லெதர் ஷீ, பெட்ரோல், டீசல், மதுபானங்கள், இறக்குமதி செய்யப்படும் ஆட்டோமொபைல் உதிரிபொருட்கள் உள்ளிட்டவை விலை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.
எவ்வளவு அதிகரிப்பு?
- பெட்ரோலுக்கு AIDC வரியாக லிட்டருக்கு 2.5 ரூபாய் விதிக்கப்படும்
- இதுவே டீசலுக்கு லிட்டருக்கு AIDC வரியாக 4 ரூபாய் விதிக்கப்படும்.
- சில மொபைல் உதிரி பாகங்களுக்கு வரி விகிதம் இல்லாமல் இருந்த நிலையில், இனி 2.5% விதிகப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- சோலார் இன்வெர்ட்டர்களுக்கு 5%ல் இருந்து 20% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- சோலார் லைட்டுகளுக்கு 5%ல் இருந்து 15% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- வாகன உதிரி பாகங்கள் மீதான சுங்க வரி 15% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- இரும்பு திருகுகள் (steel screws) - 10%ல் இருந்து 15% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- பிளாஸ்டிக் பில்டர் பொருட்கள் 10%ல் இருந்து 15% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- பருத்திக்கு சுங்க வரியாக எதுவும் இல்லாமல் இருந்த நிலையில், இனி 10% வரை உயர்த்தப்படலாம் என்றும் எதிர்பார்ப்படுகிறது.
- பட்டு(raw silk) மற்றும் நூல் பட்டுகளுக்கு (yarn silk) சுங்க வரியாக 10 - 15% வரை அதிகரிக்கலாம்.
தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையும்
குறிப்பாக தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 12.5%ல் இருந்து 7.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது தங்கம் மற்றும் வெள்ளி விலைக்கு ஆதரவாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டில் தங்கத்தின் தேவையானது குறைந்துள்ளதையடுத்து, இந்த சலுகையானது வந்துள்ளது. இது தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைய வழிவகுக்கும்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications