மத்திய அரசின் வரி வருவாயில் ரூ.5 லட்சம் கோடி துண்டு விழும்.. மத்திய அரசு மதிப்பீடு..!

கடந்த திங்கட்கிழமையன்று இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, மத்திய நிதி நிலை அறிக்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்று, அரசின் வரி வருவாய் குறையும் என்பது தான்.

குறிப்பாக 2020 - 21ம் நிதியாண்டில் மத்திய அரசின் வரி வருவாய் 5.2 லட்சம் கோடி ரூபாய் குறைந்து, 19 லட்சம் கோடி ரூபாயாக குறையும் என்று எதிர்ப்பார்ப்பதாக முடிவடைந்த பட்ஜெட் 2021 அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த வரி வருவாய் விகிதம் 2020 - 21 பட்ஜெட்டில் 24.2 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டிருந்தது.

கார்ப்பரேட் வரி வசூல்

கார்ப்பரேட் வரி வசூல்

இது முந்தைய ஆண்டு வசூலான 20 லட்சம் கோடி ரூபாயினை விட குறைவாகும். இதில் கார்ப்பரேட் வரி வருவாய் பெரியளவில் குறைந்து, 2.34 லட்சம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. இது கடந்த 2020 - 21 பட்ஜெட்டில் 6.8 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. எனினும் திருதப்பட்ட மதிப்பீட்டின் படி, 4.46 லட்சம் கோடி ரூபாயாக திருந்தப்பட்டிருந்தது.

வருமான வரி வசூல்

வருமான வரி வசூல்

இதே வருமான வரி வசூலில் 6.38 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு எதிராக, 1.8 லட்சம் கோடி ரூபாயாக உள்லது. இது மறுமதிப்பீட்டின் படி, 4.59 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதே மத்திய அரசின் ஜிஎஸ்டி வசூல் இலக்கு 6.9 லட்சம் கோடி ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 5.15 லட்சம் கோடி ரூபாயாக குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சி சரியும்

பொருளாதார வளர்ச்சி சரியும்

ஏற்கனவே இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சியிலும் 7.7 சதவீதம் துண்டு விழும் என்று அரசு கணித்துள்ளது. இதே மற்ற அமைப்புகள் 10 சதவீதத்திற்கு மேலாக சரியும் என்று கணித்துள்ளன. இதற்கிடையில் அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாய் துண்டு விழும் பட்சத்தில் இது மேலும் பின்னடைவாகவே அமையும்.

செலவினங்கள் குறையக் கூடாது

செலவினங்கள் குறையக் கூடாது

எல்லாவற்றுக்கும் மேலாக அரசின் நிதி பற்றாக்குறையும் இதனால் அதிகரிக்கும். இது அரசு செலவினங்களை குறைக்கும். உள்கட்டமைப்பு செலவு, மூலதன செலவுகளை குறைக்க வழிவகுக்கலாம். இதனால் தேவையும் முடங்கும் நிலை ஏற்படலாம். ஆக இவையெல்லாம் முடங்காமல் பார்த்துக் கொள்ள, அரசு மேற்கண்ட செலவினங்களை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+