நடப்பு ஆண்டில் மிக பரபரப்பான சூழலில், இன்னும் சில தினங்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இந்த பட்ஜெட்டில் எந்த துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறதோ இல்லையோ? நிச்சயம் ஹெல்த்கேர் துறைக்கு அதிகம் வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பும்.
ஏனெனில் இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும், கொரோனாவை எதிர்த்து போராடி வரும் ஹெல்த்கேர் துறையினர், பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
ஏன் கொரோனாவின் ஆரம்பத்தில் ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்றியதை எல்லாம் பார்க்க முடிந்தது. அந்தளவுக்கு கொரோனா வாட்டி வதைத்து வரும் நிலையில், இன்றளவிலும் கொரோனாவின் தாக்கம் மறைந்த பாடாக இல்லை.
உள்கட்டமைப்பு வசதிகள் வேண்டும்
இதனால் அந்த சமயத்தில் எழுந்த முக்கிய கோரிக்கையே ஹெல்த்கேர் துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது தான். ஒரு ஆய்வில் இந்தியாவில் 10,000 பேருக்கு ஒரு பெட் என்ற விகிதத்தில் தான் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதே சர்வதேச அளவில் 10,000 பேருக்கு 27 பெட்கள் என்ற விகிதத்தில் உள்ளது. இந்தியா தனது ஜிடிபி விகிதத்தில் 3 விகிதத்தினை தான் ஹெல்த் கேர் துறைக்கு செலவிடுகிறதாம்.
ஜிடிபி Vs ஹெல்த்கேர் துறை
இதே சர்வதேச நாடுகள் பல தங்களது ஜிடிபி விகிதத்தில் 8 சதவீதத்தினை ஹெல்த்கேர் துறைக்காக செலவிடுவதாக தெரியவந்துள்ளது. ஆக வரவிருக்கும் மத்திய பட்ஜெட் 2021ல் அரசு ஹெல்த்கேர் துறைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது மிக அவசியம் என்கின்றனர் இத்துறை சார்ந்த நிபுணர்கள்.
அதிக ஒதுக்கீடு வேண்டும்
அதோடு வரவிருக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் செலவினத்தை அரசே செலவிட வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக கொரோனா தடுப்பூசியினை கருத்தில் கொண்டு, ஹெல்த்கேர் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசிக்கு ஒரு டோஸூக்கு 200 ரூபாய் வசூலிக்கப்படலாம் என்று பேச்சு வார்த்தையில் இருக்கும் நிலையில், ஒருத்தருக்கு மொத்த தடுப்பூசி செலவு என்பது 400 ரூபாயாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
செலவு அதிகரிக்கும்
இதில் 50 சதவீதம் மக்கள் கொடுத்தாலும் அரசு 50 சதவீதம் கொடுக்க வேண்டியிருக்கும். ஆக அரசுக்கு செலவு சுமார் 27,000 கோடி ரூபாய் இருக்கலாம். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மொத்த ஒதுக்கீடு 67,484 கோடி ரூபாயாகும். மேலே கூறப்பட்டது போல் தடுப்பூசிக்கான செலவுகளை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யும்போது, தடுப்பூசி செலவே சுமார் 40% ஆக்கிரமிக்கும்.
கவனிக்கப்பட வேண்டியவைகளில் சில
இது தவிர நாட்டில் உள்கட்டமைப்பு செலவினங்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக படுக்கைகள், இடைவெளியை பின்பற்ற இடப்பற்றாக்குறையை நிரப்ப வேண்டும். ஆக ஹெல்த்கேர் துறைக்கு நிதி ஒதுக்கீடு நிச்சயம் சற்று அதிகரிக்கலாம் என்றும் இக்ரா எதிர்பார்க்கின்றது. இது மட்டும் அல்ல, இன்னும் ஹெல்த்கேர் துறையில் பல சலுகைகள், செலவினங்கள், உள்கட்டமைப்பு, வரி சலுகைகள் என பலவும் எதிர்பார்க்கப்படுகிறது. நிறைவேற்றுமா அரசு? எந்த துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறதோ இல்லையோ, நிச்சயம் ஹெல்த்கேர் துறைக்கு கொடுத்து தானே ஆக வேண்டும். கொஞ்சம் பொறுத்திருந்தான் பார்ப்போமே. எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்று.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications