Budget 2021.. ரயில்வே துறைக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்படலாம்..!

கொரோனாவால் ஏற்பட்ட தாக்கப்பட்ட, இந்தியாவின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியினை சந்தித்துள்ள நிலையில், இந்த பட்ஜெட் 2021 அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு இந்த பட்ஜெட் முதல் முறையாக பேப்பர்லெஸ் பட்ஜெட்டாக இருக்கும். இதுவரை இல்லாத அளவுக்கு இருக்கும் என்றும் நிதியமைச்சர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த பட்ஜெட் எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு இருக்குமா? குறிப்பாக ரயில்வே துறைக்கென்றே தனி பட்ஜெட் போடப்பட்ட வந்த நிலையில், தற்போது எல்லாவற்றிற்கும் ஒரே பட்ஜெட்டாக வந்து கொண்டுள்ளது. ஆக ரயில்வே துறைக்கு என்ன முக்கிய அறிவிப்புகள் இருக்குமா? என்ற பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது.

அதிக நிதி ஒதுக்கீடு

அதிக நிதி ஒதுக்கீடு

இதற்கிடையில் இந்த முறை ரயில்வே துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரயில்வே துறையில் 13 சதவீதம் அளவிலான கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என்றும் இத்துறை சார்ந்த வல்லுனர்கள் கூறியுள்ளனர். ரயில்வே துறை மட்டும் அல்ல, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு துறையினரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரயில்வே துறை முக்கிய பங்கு

ரயில்வே துறை முக்கிய பங்கு

இதனால் அவர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாகவே உள்ளது. அதில் ரயில்வே துறையும் ஒன்று. கொரோனா காலத்திலும் ஓரளவு தனது சேவையை நிலை நாட்டிக் கொண்டிருந்தது. ஏனெனில் சில துறைகள் கொரோனா காலத்தில் முற்றிலும் நிறுத்தப்பட்டன. அந்த வகையில் பார்க்கும்போது ரயில்வே துறையானது முக்கிய பங்கினை கொண்டுள்ளது. குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வீடு திரும்ப உதவியது.

கொரோனா காலத்தில் பெரும் இழப்பு

கொரோனா காலத்தில் பெரும் இழப்பு

எனினும் மற்ற துறைகளைப் போலவே ரயில்வே துறையும் பெரும் இழப்பினை சந்தித்தது. முன்னதாக இந்திய ரயில்வே மற்றும் மத்திய பட்ஜெட் இரண்டும் தனியாக, கடந்த 92 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தன. ஆனால் இப்படி இரு நீண்ட நாளைய நடைமுறையானது, கடந்த 2016ல் முடிவுக்கு வந்தது. ரயில்வே பட்ஜெட், மத்திய பட்ஜெட்டுடன் இணைக்கபட்டது.

எவ்வளவு நிதி?

எவ்வளவு நிதி?

இந்த நிலையில் ரயில்வே துறைக்கு இந்த பட்ஜெட்டில் 1.79 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 75,000 கோடி ரூபாய் ஜிபிஎஸ் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரயில்வே துறைக்கு 70,250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது முந்தைய ஆண்டினை விட 7 சதவீதம் அதிகமாகும்.

புதிய அதிவேக ரயில்களை அறிமுகப்படுத்தலாம்

புதிய அதிவேக ரயில்களை அறிமுகப்படுத்தலாம்

அதோடு இந்த ஆண்டில் சில அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது சுற்றுலா துறையை ஊக்குவிப்பதற்காக, சில சுற்றுலா மையங்கள், யாத்திரை இடங்கள் மற்றும் பிற முக்கிய பகுதிகளை இணைக்கும் விதமாக இந்த திட்டம் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த முறை புல்லட் ரயில் விரிவாக்க திட்டம் பற்றி அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாய துறைக்கு தனி ரயில் அறிமுகப்படுத்தலாம்

விவசாய துறைக்கு தனி ரயில் அறிமுகப்படுத்தலாம்

அதே போல சில தேஜஸ் ரயில்களையும் அறிவிக்கலாம். முன்னதாக மும்பை - அகமதாபாத் வரையில் அறிவித்திருந்தார். ஆனால் இந்த திட்டம் கொரோனாவின் காரணமாக அறிவித்திருந்தார். ஆனால் இந்த முறை கூடுதல் அறிவிப்புகளோடு, புதிய சில தேஜஸ் ரயில்களையும் அறிவிக்கலாம். கடந்த ஆண்டு விவசாய துறைக்கென்று பொருட்களை வேகமாக எடுத்து செல்ல சில ரயில்களை அறிமுகப்படுத்தலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+