டெல்லி: பலத்த எதிர்பார்ப்புகளுக்கும், சவால்களுக்கும் மத்தியில், ஒரு கடினமான காலகட்டத்தில் இன்று தனது மூன்றாவது பட்ஜெட்டினை நிதிமையச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய விருக்கிறார்..
உண்மையில் இது அரசுக்கு ஒரு சவால் மிகுந்த ஆண்டாக இருக்கும். ஏனெனில் கடந்த ஆண்டில் இந்தியாவில் காலடி எடுத்து வைத்த கொரோனா, இன்று வரை இந்தியாவினை ஆட்டிப்படைத்து வருகின்றது. இது கடந்த ஆண்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது.

ஆனால் இந்த லாக்டவுன் மக்களை மட்டும் அல்ல, பொருளாதாரத்தினையும் பதம் பார்த்தது. இதனால் இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் பலத்த எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது.
குறிப்பாக கொரோனாவினால் இந்தியா எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய பிரச்சனைகளில் வேலையின்மையும் ஒன்று. இரண்டாவது தேவையை மீட்பது.
மூன்றாவது முதலீடு குறித்தான வளர்ச்சி விகிதம். ஆக இது மூன்றையும் முக்கியமாக மீட்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. இப்படி முக்கிய மூன்று சவால்களுக்கும் மத்தியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் 2021 அறிக்கையினை இன்னும் சில நிமிடங்களில் தாக்கல் செய்ய விருக்கிறார்.


Click it and Unblock the Notifications