பட்ஜெட் 2021-22 LIVE: வருமான வரி ஸ்லாப்பில் மாற்றமில்லை

டெல்லி: 2021-22ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்.

இது தொடர்பான தகவல்களுக்கு இந்த பக்கத்தில் இணைந்து இருங்கள்:

3:25 PM
Feb 1, 2021
சுகாதாரம், அடிப்படை கட்டமைப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரதுறைக்கு ரூ2.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது- நிர்மலா சீதாராமன்.
3:13 PM
Feb 1, 2021
கடினமான சூழலில் மிகச்சிறப்பான பட்ஜெட் - பிரதமர் மோடி. மத்திய பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடி பாராட்டு. இன்றைய பட்ஜெட் இந்தியாவின் நம்பிக்கையை காட்டுகிறது -பிரதமர் மோடி. நாட்டின் வளர்ச்சியை பட்ஜெட் உறுதிப்படுத்துகிறது - பிரதமர் மோடி.
2:59 PM
Feb 1, 2021
பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு ரூ4.78 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு. கடந்த பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு ரூ4.71 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
1:38 PM
Feb 1, 2021
சென்னை- சேலம் 8 வழிச்சாலைக்கான டெண்டர் நடப்பாண்டில் இறுதி செய்யப்படும்- நிர்மலா சீதாராமன்
1:17 PM
Feb 1, 2021
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 1,500 புள்ளிகளுக்கு மேல் உயர்வு
1:11 PM
Feb 1, 2021
ஆட்டோமொபைல்ஸ், செல்போன் உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்வு.
1:10 PM
Feb 1, 2021
வீட்டு வசதித் துறை, விமானங்களை வாடகைக்கு விடக்கூடிய நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு வரி விதிப்பிலிருந்து மேலும் ஓராண்டுக்கு விலக்கு. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை வரிவிதிப்பு பிரச்சினையிலிருந்து விலக்கு. கட்டமைப்புத் துறையில் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
1:09 PM
Feb 1, 2021
400 க்கும் மேற்பட்ட பழைய சுங்கவரி விலக்குகளை மறுஆய்வு செய்ய முடிவு. அக்டோபர் 1, 2021 க்குள் நாட்டில் புதிய சுங்க வரி கட்டமைப்பை அமல்படுத்த முடிவு.
1:09 PM
Feb 1, 2021
21 செலவினங்களை ஈடுசெய்ய அடுத்த இரண்டு மாதங்களில் ரூ .80,000 கோடியை அரசு கடன் வாங்கும். வரும் 2021-22 நிதியாண்டில் சுமார் ரூ .12 லட்சம் கோடி கடன் வாங்க அரசு முடிவு. அரசுக்கு ரூ .3.53 லட்சம் கோடி மூலதனச் செலவு உட்பட ரூ. 34.83 லட்சம் கோடி செலவாகும்.
1:07 PM
Feb 1, 2021
புதிய ஸ்டார்ட் -அப் நிறுவனங்களுக்கு வரி விலக்கு சலுகை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு
1:02 PM
Feb 1, 2021
வருமான வரி அடுக்கு விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வழக்கம் போல் 5லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த தேவையில்லை. கார்ப்பரேட் வரிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
1:00 PM
Feb 1, 2021
வருமான வரி அறிக்கை தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில் 3.31 கோடியாக இருந்தது. வருமான வரி அறிக்கை தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டில் 6.48 கோடியாக அதிகரித்துள்ளது.
12:55 PM
Feb 1, 2021
குறைந்த விலை வீடுகளை வாங்குபவர்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகை 2022ம் ஆண்டு வரை நீட்டிப்பு
12:52 PM
Feb 1, 2021
டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: மேற்கொள்ள ரூ.3,768 கோடி ஒதுக்கீடு
12:50 PM
Feb 1, 2021
விமான குத்தகை நிறுவனங்களுக்கு வரி விலக்கு. வரி தணிக்கைக்கான வரம்பு 5 கோடியில் இருந்து 10 கோடியாக அதிகரிப்பு. 95 சதவீதம் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்பவர்களுக்கே வரி தணிக்கை வரம்பு உயர்வு.
12:39 PM
Feb 1, 2021
6 ஆண்டுகளில் ஆதிதிராவிட மாணவ-மாணவியருக்கு உதவ ரூ35,219 கோடி ஒதுக்கீடு
12:37 PM
Feb 1, 2021
ஆழ்கடல் ஆய்வுகளுக்கு, பல்லுயிர் பெருக்கத்தை காப்பாற்ற ஆழ்கடல் ஆய்வு அமைப்பு உருவாக்கப்படும்
12:36 PM
Feb 1, 2021
சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு ரூபாய் 15,700 கோடி ஒதுக்கீடு
12:34 PM
Feb 1, 2021
75 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விதிவிலக்கு. திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் உரை.
12:32 PM
Feb 1, 2021
நடப்பு நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை ஜிடிபியில் 9.5% ஆக இருக்கும். வரும் நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 6.8% ஆக இருக்கும். 2025-26க்குள் நிதிப்பற்றாக்குறையை 4.5% ஆக குறைக்க திட்டம்.
12:29 PM
Feb 1, 2021
தமிழ்நாட்டில் பன்னோக்கு கடல்பாசி பூங்கா ஒன்றை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு
12:27 PM
Feb 1, 2021
வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் திட்டத்தில் 1.68 லட்சம் கோடி பேர் பதிவு- 1,000 மண்டிகள் இணைப்பு
12:24 PM
Feb 1, 2021
இந்திய விண்வெளித் துறையின் கீழ் புதிய பொதுத்துறை நிறுவனமாக நியூ ஸ்பேஸ் இந்தியா உருவாக்கப்படும். நியூ ஸ்பேஸ் இந்தியா மூலம் பிஎஸ்எல்வி சிஎஸ்51 செலுத்தும் வாகனம் உருவாக்கப்படும்.
12:23 PM
Feb 1, 2021
இந்திய விண்வெளித் துறையின் கீழ் புதிய பொதுத்துறை நிறுவனமாக நியூ ஸ்பேஸ் இந்தியா உருவாக்கப்படும். நியூ ஸ்பேஸ் இந்தியா மூலம் பிஎஸ்எல்வி சிஎஸ்51 செலுத்தும் வாகனம் உருவாக்கப்படும்.
12:23 PM
Feb 1, 2021
மேற்கு வங்கம், அஸ்ஸாமில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ரூ. 1,000 கோடியில் திட்டம்
12:21 PM
Feb 1, 2021
டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி- ரூ 9,768 கோடி நிதி ஒதுக்கீடு. டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரூ1,500 கோடி நிதி ஒதுக்கீடு. தேசிய மொழிகளை மொழிபெயர்க்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
12:17 PM
Feb 1, 2021
டேட்டா அனலிட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழி கற்றல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம்
12:17 PM
Feb 1, 2021
750 ஏகலைவா மாதிரி பள்ளிகள் நாடு முழுவதும் அமைக்கப்படும்
12:15 PM
Feb 1, 2021
லே-வில் மத்திய பல்கலைக் கழகம் அமைக்கப்படும்
12:14 PM
Feb 1, 2021
15,000 பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்
12:13 PM
Feb 1, 2021
குஜராத்தில் பொருளாதார தொழில்நுட்ப முனையம் உருவாக்கப்படும். நாடு முழுவதும் 100 புதிய சைனிக் பள்ளிகள் அமைக்கப்படும்.
12:12 PM
Feb 1, 2021
தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா அமைக்கப்படும்
12:12 PM
Feb 1, 2021
மாநிலங்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பது குறித்து முடிவெடுக்கலாம்
12:09 PM
Feb 1, 2021
வர்த்தக நோக்கிலான கப்பல் போக்குவரத்து என்ற புதிய திட்டம் தொடங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் வர்த்தக நோக்கிலான கப்பல் போக்குவரத்து திட்டத்திற்காக ரூ1,624 கோடி ஒதுக்கீடு.
12:08 PM
Feb 1, 2021
சென்னை, கொச்சி உள்ளிட்ட 5 மீன்பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படும்
12:07 PM
Feb 1, 2021
மேலும் 2 பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும். விவசாயிகளுக்கு கடன் வழங்குவதை அதிகப்படுத்த ரூ16.5 லட்சம் கோடி ஒதுக்கீடு.
12:05 PM
Feb 1, 2021
விவசாயிகள் நலனில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடரும். நேரடி கொள்முதல் திட்டத்தை தொடர்ந்து மத்திய அரசு செயல்படுத்தும்.
12:03 PM
Feb 1, 2021
4,378 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு குடிநீர் திட்டங்களுக்காக ரூ2.87 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
12:01 PM
Feb 1, 2021
அரசு நிறுவன பங்குகள் விற்பனை மூலம் ரூ1.75 லட்சம் கோடி திரட்ட முடிவு
12:00 PM
Feb 1, 2021
ரயில்வே துறைக்கு ரூபாய் 1,07,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 139 ஜிகாவாட் அளவுக்கான மின்உற்பத்தி அதிகரித்துள்ளது.
11:58 AM
Feb 1, 2021
துறைமுகங்களில் தனியார் பங்களிப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்
11:56 AM
Feb 1, 2021
அடுத்த 3 ஆண்டுகளில் 100 மாவட்டங்களில் குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்
11:54 AM
Feb 1, 2021
ரயில்வே துறையில் சிறப்பு வழித்தடங்கள் உருவாக்கப்படும். மேலும் சில விமான நிலையங்கள் தனியாருக்கு வழங்கப்படும்.
11:52 AM
Feb 1, 2021
காப்பீட்டுத் துறையில் நேரடி அன்னிய முதலீடு 49%-ல் இருந்து 74% ஆக உயர்த்தப்பட்டது
11:48 AM
Feb 1, 2021
மின் விநியோகத்தில் தனியார் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்
11:48 AM
Feb 1, 2021
கூடுதலாக 1 கோடி பேருக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்
11:48 AM
Feb 1, 2021
குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டம் 100 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும். மின்நுகர்வோர் தாம் விரும்புகிற நிறுவனங்களிடம் இருந்தும் மின்சாரத்தை பெற புதிய திட்டம்.
11:45 AM
Feb 1, 2021
ரயில்வே துறைக்கு ரூ1.15 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
11:42 AM
Feb 1, 2021
சென்னையில் 118 கி.மீ தொலைவுக்கு 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்படும்
11:42 AM
Feb 1, 2021
சென்னை 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ63,246 கோடி நிதி ஒதுக்கீடு
11:40 AM
Feb 1, 2021
கேரளாவில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ65,000 கோடி நிதி ஒதுக்கீடு. மேற்கு வங்கத்தில் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ95,000 கோடி நிதி ஒதுக்கீடு.
11:39 AM
Feb 1, 2021
2022-ம் ஆண்டுக்குள் 8,500 கி.மீ நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும். 11,000 கி.மீ தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படும். அகல ரயில் பாதைகள் அனைத்தும் 2023 டிசம்பருக்குள் மின்மயமாக்கப்படும்.
11:37 AM
Feb 1, 2021
கேரளாவில் 1100 கி.மீ, மேற்கு வங்கத்தில் 675 கி.மீ, அஸ்ஸாமில் 1,300 கி.மீ நீளத்துக்கு நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படும்
11:35 AM
Feb 1, 2021
கேரளா, மேற்கு வங்க மாநிலங்களிலும் புதிய சாலை மேம்பாட்டுத் திட்டங்களை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்
11:34 AM
Feb 1, 2021
தமிழ்நாட்டில் ரூ 1.03 லட்சம் கோடியில் சாலை மேம்பாட்டு திட்டங்கள். தமிழ்நாட்டில் 3,500 கி.மீ நீளத்துக்கு புதிய சாலைகள் அமைக்கப்படும். மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்படும்.
11:32 AM
Feb 1, 2021
கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 7,400 திட்டங்கள் செயல்படுத்தப்படும்- நிர்மலா சீதாராமன்
11:32 AM
Feb 1, 2021
Union Budget 2021: Tirupur பின்னலாடை நிறுவனங்களின் எதிர்பார்ப்பு என்ன?
11:31 AM
Feb 1, 2021
20 ஆண்டுகள் பயன்பாட்டில் உள்ள வாகனங்களை அழிக்க தன்னார்வ அடிப்படை திட்டம் செயல்படுத்தப்படும்
11:28 AM
Feb 1, 2021
Union Budget 2021 புதிய நடைமுறை அறிமுகம்
11:26 AM
Feb 1, 2021
சுகாதார துறைக்கு கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 137% கூடுதல் நிதி ஒதுக்கீடு
11:25 AM
Feb 1, 2021
கொரோனா தடுப்பூசிகளுக்காக ரூ. 35,000 கோடி நிதி ஒதுக்கீடு
11:19 AM
Feb 1, 2021
மேலும் 2 கொரோனா தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன- நிர்மலா சீதாராமன்
11:17 AM
Feb 1, 2021
சுகாதாரதுறை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. 64,180 கோடி ஒதுக்கீடு
11:15 AM
Feb 1, 2021
நடப்பு பட்ஜெட்டில் சுகாதார துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
11:14 AM
Feb 1, 2021
பொருளாதார சரிவுக்கு கொரோனா பாதிப்புதான் காரணம் - நிர்மலா சீதாராமன். பொருளாதாரத்தை மீட்டெடுக்க தற்போதைய பட்ஜெட் உதவும்.
11:12 AM
Feb 1, 2021
கொரோனா காலத்தில் பணியாற்றிய முன்கள பணியாளர்களுக்கு நன்றி. மேலும் பல கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வர உள்ளன.
11:11 AM
Feb 1, 2021
2021-ம் ஆண்டிலும் கொரோனாவுக்கு எதிரான போர் தொடரவே செய்யும்: நிர்மலா சீதாராமன்
11:10 AM
Feb 1, 2021
தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன
11:09 AM
Feb 1, 2021
மத்திய அரசின் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் கோடி மதிப்பிலான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன
11:07 AM
Feb 1, 2021
சர்வதேச பொருளாதாரம் வரலாறு காணாத வகையில் மந்த நிலையில் உள்ளது
11:07 AM
Feb 1, 2021
கொரோனா லாக்டவுனுக்கு மத்தியில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளோம்- நிர்மலா சீதாராமன். சர்வதேச பொருளாதாரத்தில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது- நிர்மலா சீதாராமன்.
11:06 AM
Feb 1, 2021
விவசாய சட்டங்களை திரும்பப் பெற கோரி லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கம்
11:05 AM
Feb 1, 2021
கூச்சல் குழப்பங்களுக்கு இடையே பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் நிர்மலா சீதாராமன்
11:03 AM
Feb 1, 2021
நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
10:58 AM
Feb 1, 2021
மத்திய பட்ஜெட்- அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
10:47 AM
Feb 1, 2021
விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங். எம்பிக்கள் ஜஸ்பிர் சிங் கில், குர்ஜித் சிங் ஆகியோர் கருப்பு அங்கியுடன் நாடாளுமன்றம் வருகை
10:45 AM
Feb 1, 2021
வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெற வேண்டும்- ராகுல் காந்தி
10:45 AM
Feb 1, 2021
மத்திய பட்ஜெட் தொடர்பாக ராகுல் காந்தி ட்வீட்: சிறுகுறு தொழில்களுக்கு, விவசாயிகளுக்கு ஆதரவான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டும்; எல்லை பாதுகாப்பை வலுப்படுத்த பாதுகாப்பு துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும்; மக்கள் உயிர்களைப் பாதுகாக்க சுகாதார துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
10:42 AM
Feb 1, 2021
பட்ஜெட் தாக்கல்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நாடாளுமன்றத்திற்கு வருகை
10:35 AM
Feb 1, 2021
நாடாளுமன்றத்தில் சற்று நேரத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது
10:23 AM
Feb 1, 2021
பட்ஜெட் தாக்கல்- மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
10:14 AM
Feb 1, 2021
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
10:06 AM
Feb 1, 2021
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நாடாளுமன்றம் வருகை தந்தனர்
10:03 AM
Feb 1, 2021
நாடாளுமன்றம் வருகை தந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
10:02 AM
Feb 1, 2021
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழு சந்திப்பு
9:44 AM
Feb 1, 2021
மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 443 புள்ளிகள் உயர்ந்து 46,728.83 ஆக வர்த்தகம்- தேசிய பங்கு சந்தையான நிப்டி 114 புள்ளிகள் உயர்வு
9:33 AM
Feb 1, 2021
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
9:32 AM
Feb 1, 2021
பட்ஜெட் தாக்கல்- பெரும் எதிர்பார்ப்புடன் பங்கு சந்தைகள்- மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 406 புள்ளிகள் உயர்வு
9:31 AM
Feb 1, 2021
மத்திய பட்ஜெட் விவரங்கள் உடனுக்குடன் ஆன்லைனில் வெளியிடப்படும்
9:30 AM
Feb 1, 2021
மத்திய பட்ஜெட் குறித்து இன்று மாலை 4.30 மணிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர்களை சந்திக்கின்றனர்
9:23 AM
Feb 1, 2021
பட்ஜெட்டை தாக்கல் செய்ய நாடாளுமன்றம் புறப்பட்டார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
9:19 AM
Feb 1, 2021
நிதி அமைச்சகத்தில் இருந்து அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அனுராக் தாகுர் புறப்பட்டனர்
9:17 AM
Feb 1, 2021
மத்திய பட்ஜெட்டை 3-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
9:16 AM
Feb 1, 2021
கொரோனா காரணமாக முதல்முறையாக டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்
9:11 AM
Feb 1, 2021
ஆவணங்கள் எதுவுமே இல்லாமல் ஸ்மார்ட் பட்ஜெட் முதல் முறையாக தாக்கல் செய்யப்படுகிறது
9:11 AM
Feb 1, 2021
காலை 10.15 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது
9:11 AM
Feb 1, 2021
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழு சந்திக்கிறது
9:00 AM
Feb 1, 2021
பட்ஜெட் தாக்கல்... காலை முதலே பரபரப்பாக இருக்கும் மத்திய நிதி அமைச்சகம்
8:53 AM
Feb 1, 2021
நிதி அமைச்சகத்துக்கு வருகை தந்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
8:49 AM
Feb 1, 2021
அன்னிய நேரடி முதலீடுகளை கவரும் வகையிலான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறக் கூடும் என எதிர்பார்ப்பு
8:49 AM
Feb 1, 2021
உள்கட்டமைப்புக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதன் மூலம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம் என எதிர்பார்ப்பு
8:44 AM
Feb 1, 2021
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 9-வது பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது
8:42 AM
Feb 1, 2021
மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறலாம் என எதிர்பார்ப்பு
8:41 AM
Feb 1, 2021
மருத்துவ காப்பீடுகளுக்கான வருமான வரி சலுகை வரம்பு உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்ப்பு
8:39 AM
Feb 1, 2021
நிதி அமைச்சகத்துக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகுர் வருகை தந்தார்
8:38 AM
Feb 1, 2021
மத்திய பட்ஜெட்டில் வருமான வரி சலுகைகள் கிடைக்குமா என எதிர்பார்ப்பு
8:36 AM
Feb 1, 2021
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் இருக்கும்- மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகுர்
8:34 AM
Feb 1, 2021
37 மாதங்களாக மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) சரிவை சந்தித்துள்ள நிலையில் இன்றைய பட்ஜெட் முக்கியமானதாகும். 1991-ம் ஆண்டுக்கு பின் மிக முக்கியமான பட்ஜெட் இது- மூத்த காங். தலைவர் மணீஷ் திவாரி
8:30 AM
Feb 1, 2021
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகுர் வீட்டில் வழிபாடு நடத்தினார்.
6:06 AM
Feb 1, 2021
விவசாய கடன் தள்ளுபடியை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்பு. சாமனிய மக்களுக்கு சந்தோஷம் தரும் பட்ஜெட்டாக இருக்குமா என எதிர்பார்ப்பு.
6:05 AM
Feb 1, 2021
தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு என மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் வெளியாகும். வருமானவரி விலக்கு வரம்பை உயர்த்துவது பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்பு.
6:05 AM
Feb 1, 2021
முதன் முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கலாகிறது. Union Budget App என்ற மொபைல் ஆப்பில் பட்ஜெட் அறிக்கையை பார்க்கலாம்.
6:05 AM
Feb 1, 2021
நாடாளுமன்றத்தில் 2021 -22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கலாகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
3:44 PM
Jan 29, 2021
சரியான நேரத்தில் செய்யப்பட்ட லாக்டவுன் உயிர்களோடு சேர்த்து பொருளாதாரத்தை காப்பாற்றியது- அரவிந்த்
3:38 PM
Jan 29, 2021
பொருளாதாரம் மீண்டு விடும், உயிர் போனால் வராது. இந்தியா V வடிவ பொருளாதார வளர்ச்சியை பார்க்க உள்ளது - அரவிந்த் சுப்பிரமணியன்.
3:37 PM
Jan 29, 2021
டெல்லியில் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு. பொருளாதார ஆய்வறிக்கையை கொரோனா போராளிகளுக்கு சமர்ப்பிக்கிறோம்- அரவிந்த்
3:25 PM
Jan 29, 2021
தனியார் மருத்துவமனைகள் ஆதிக்கம்.. ஹெல்த்கேர் துறைக்குப் புதிய கட்டுப்பாட்டு ஆணையம் அவசியம்
3:25 PM
Jan 29, 2021
மக்களின் சுகாதாரம் மற்றும் உடல்நல ஆரோக்கியத்தை முக்கியத்துவமாகக் கொண்டு பட்ஜெட் அறிக்கை வெளியிடும் 189 நாடுகளின் பட்டியலில் இந்திய 179வது இடத்தில் உள்ளது.
2:20 PM
Jan 29, 2021
கொரோனா வைரஸ் லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம், 2021-22 நிதியாண்டில் வலுவான மீட்சியடையும்
2:20 PM
Jan 29, 2021
இந்திய பொருளாதாரம் V வடிவ மீட்பை அடையும்- பொருளாதார ஆய்வறிக்கை தகவல்
2:00 PM
Jan 29, 2021
2021ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி -7.7 சதவீதமாக இருக்கும் : எக்னாமிக் சர்வே 2021
2:00 PM
Jan 29, 2021
இன்று வெளியிடப்பட்டு உள்ள பொருளாதார ஆய்வறிக்கையின் படி 2022ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 11 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்திருக்கும்.
2:00 PM
Jan 29, 2021
விவசாய துறையின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு தொடர்ந்து முக்கியமானதாக விளங்கும்
2:00 PM
Jan 29, 2021
உற்பத்தி, கட்டுமானம் துறைகள் கொரோனா பாதிப்பால் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது
1:59 PM
Jan 29, 2021
இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு கொரோனா தடுப்பு மருந்து பெரிய அளவில் பயன்படும்.
1:59 PM
Jan 29, 2021
அடுத்த 2 வருடத்தில் உலகிலேயே இந்திய பொருளாதாரம் தான் மிகவும் வேகமாக வளர்ச்சி அடையும் நாடாக இருக்கும் என IMF கூறியதை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1:39 PM
Jan 29, 2021
நாடாளுமன்ற கூட்டம் பிப்ரவரி 1, காலை 11 மணி வரையில் ஒத்திவைப்பு
1:33 PM
Jan 29, 2021
இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையை மொத்த எதிர்கட்சிகளும் புறக்கணித்துள்ளது எதிர்பார்க்காத ஒன்று என மத்திய அமைச்சர் ராம்நாத் கேவிந்த் தெரிவித்துள்ளார்.
12:45 PM
Jan 29, 2021
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பொருளாதார அறிக்கை தாக்கல் செய்வார்
12:45 PM
Jan 29, 2021
பொருளாதார ஆய்வறிக்கையை தொடர்ந்து, தலைமை பொருளாதார ஆலோசகர் டாக்டர் கே வி சுப்பிரமணியன் மாலை 3:30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார்
11:59 AM
Jan 29, 2021
செங்கோட்டை வன்முறை சம்பவங்களுக்கு குடியரசு தலைவர் கண்டனம். சட்டம்-ஒழுங்கை லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாது என நாடாளுமன்றத்தில் உரை.
11:47 AM
Jan 29, 2021
பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும் முன்பாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றி வருகிறார்
11:47 AM
Jan 29, 2021
பட்ஜெட் மற்றும் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 7 பைசா உயர்வடைந்துள்ளது
11:47 AM
Jan 29, 2021
புதிய ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளோம், புதிய வாய்ப்புகளை நோக்கி இந்தியா பயணிக்க உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+