அடுத்த சில தினங்களுக்கு இந்திய பங்கு சந்தை வர்த்தகத்தில் பட்ஜெட் 2021ன் எதிரொலி இருக்கலாம். இந்த பட்ஜெட் பல போராட்டங்களுக்கும் மத்தியில் தாக்கல் செய்யப்படுவதால், எப்படி அனைவருக்கும் ஏற்ற ஒரு பட்ஜெட்டாக இருக்கும்.
சாமனிய மக்களுக்கு பயன் அளிக்குமா? சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு என்ன இருக்கும் என்ற பல கேள்விகள் எழாமல் இல்லை.

இப்படி பல கேள்விகளுக்கும் மத்தியில் முதலீட்டாளர்கள், அடுத்து வரும் சந்தை அமர்வுகள் எப்படி இருக்கும். இந்த பட்ஜெட்டில் எந்த துறைக்கு முக்கியத்துவம் இருக்கும். எந்த பங்குகளை வாங்கலாம் என்ற பல கேள்விகள் எழுந்திருக்கும். சரி வாருங்கள் அதனை பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்கவிருக்கிறோம்.
அரசின் சில சீர்திருத்தங்களால் சில துறைகளில் வளர்ச்சி மேம்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சந்தையில் ஏற்றத்தினை காண வழி வகுக்கலாம். குறிப்பாக தொழிலாளர் சட்டங்கள், நீதித்துறை சீர்திருத்தங்கள் தொடர்பான நேர்மறையான அறிவிப்புகள் வரலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். அவை சந்தையில் ஒரு உந்துதலை வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு வரவிருக்கும் பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு துறை மற்றும் ஹெல்த்கேர் துறைக்கு செலவினங்கள் அதிகரிக்கப்படலாம். இது தவிர ரியல் எஸ்டேட் மற்றும் ரயில்வே துறை, கட்டுமான துறையில் பட்ஜெட்டில் முக்கியமாக கவனம் செலுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக பட்ஜெட்டிற்கு பிறகு மேற்கண்ட துறை சார்ந்த பங்குகள் ஏற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் தான் ஆய்வாளர்கள் 10 பங்குகளை பரிந்துரை செய்துள்ளனர். இது மணிகன்ட்ரோல் செய்தியினை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. இந்த பங்கு பரிந்துரையில் முதலிடம் பிடித்தது Varroc Engineering (VEL) பங்கு தான். இரண்டாவது Kalpataru ppwer transmission (KPTL), அடுத்தது L&T, அடுத்தடுத்த பங்குகளாக PNC infratech, Dalmia Bharat, autobindo pharma, சன் பார்மா, ஜேஎஸ்டபள்யூ ஸ்டீல், ஹட்கோ உள்ளிட்ட பங்குகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
மேற்கண்ட இந்த பங்குகள் நிபுணர்களால் பரிந்துரை செய்யப்பட்டிருந்தாலும், இதனை பற்றிய தெளிவான புரிதலுடன் வணிகம் செய்வது நல்லது. ஆக இறுதி முடிவு உங்களுடையதாக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications