டெல்லி: பட்ஜெட்டில் தனி நபர்களுக்கான வருமான வரியில் சலுகைகள் என்பது முக்கியமாக அறிவிக்கப்பட வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்புகளாக இருந்தது. ஏனெனில் இது தான் நடுத்தர மக்களின் கைகளில் பணப்புழக்கத்தினை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆக இது தேவையை மீட்டுக் கொண்டு வரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முடிவில் ஏமாற்றமே மிஞ்சியது. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கும் இது பெரும் ஏமாற்றமாகவே உள்ளது.

எனினும் இந்த பட்ஜெட்டில் முதியோர்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது 75 வயதுக்கும் மேற்பட்ட ஓய்வூதியம் மற்றும் வட்டியை மட்டுமே நம்பியுள்ள முதியோர்களுக்கு, வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு நடப்பு நிதியாண்டில் 6.48 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். மேலு சிறிய அளவிலான வருமான வரி பிரச்சனைகள் தீர்த்து வைக்க புதிய குழு ஒன்று அமைக்கப்படும்.
மேலும் வெளி நாடு வாழ் இந்தியர்கள் தாயகம திரும்பும்போது இரட்டை வரி விதிப்புக்கு ஆளாவதை தடுக்கும் விதமாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வீட்டுக்கடனில் 1.5 லட்சம் ரூபாயில் இருந்து, 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்ட வீட்டுக்கடன் வட்டிசலுகை மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக ரியல் எஸ்டேட் துறையினை ஊக்குவிக்கும் விதமாக குறைந்த விலையில் வீடு வாங்குபவர்களுக்கும், வீடு கட்டுபவர்களுக்கு 2022ம் ஆண்டு வரையில் வரிச்சலுகை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications