பட்ஜெட் 2021ல் பலவிதமான அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் இந்திய சந்தைகள் கிடு கிடு ஏற்றத்தினை கண்டு வருகின்றன.
சந்தையின் தொடக்கத்திலே ஏற்றத்தில் தொடங்கிய நிலையில், தற்போது சென்செக்ஸ் 2002 புள்ளிகள் அதிகரித்து, 48,292 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 572 புள்ளிகள் அதிகரித்து, 14,206 புள்ளிகள் ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.

இதற்கிடையில் நிஃப்டி, பிஎஸ்இ குறியீடுகளில், பிஎஸ்இ ஹெல்த்கேர் தவிர, மற்றவை அனைத்தும் பச்சை நிறத்திலேயே காணப்படுகிறது. மற்றவை அனைத்தும் பலமான ஏற்றத்திலேயே காணப்படுகிறது.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் இந்தஸிந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பின்செர்வ், ஹிண்டால்கோ, லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே யுபிஎல், டாக்டர் ரெட்டி லேபாரட்டீஸ், டெக் மகேந்திரா, சிப்லா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள இந்தஸிந்த் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பின்செர்வ், எஸ்பிஐ, லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே டாக்டர் ரெட்டி லேபாரட்டீஸ், டெக் மகேந்திரா, உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 72.92 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
பட்ஜெட்டில் பல்வேறு விதமான அறிவிப்புகள் வந்துள்ள நிலையில், இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் தங்களது முதலீடுகளை தொடர்ந்து வருகின்றனர். இதனால் சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications