இந்த 3 விஷயங்களை நிர்மலா சீதாராமன் கட்டாயம் செய்ய வேண்டும்..!

மத்திய அரசுக்கு 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பது மிகவும் சவாலான காரியம்.

ஒருபக்கம் கொரோனா, ஒமிக்ரான் தொற்று மூலம் கடந்த 2 வருடம் மக்களின் வாழ்க்கை தலைகீழாகப் புரட்டிப்போட்டது, பலர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர், பல லட்சம் நிறுவனங்கள் இந்த 2 வருட காலகட்டத்தில் மூடப்பட்டு உள்ளது, நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

 3வது தொற்று அலை

3வது தொற்று அலை


இந்த நிலையில் நாட்டின் 3வது தொற்று அலை இந்தியாவில் துவங்கியுள்ளது. இந்நிலையில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சாதகமாகவும், அதேவேளையில் பொருளாதார வளர்ச்சிக்குச் சாதகமான பட்ஜெட்-ஐ உருவாக்குவது என்பது எளிதான காரியமில்லை.

இதற்கிடையில் மத்திய அரசுக்குப் புதிதாக ஒரு திட்டத்தையும் கையில் எடுத்துள்ளது.

 

 பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

இந்தியாவில் துவங்கியுள்ள கொரோனா தொற்றின் 3வது அலை பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கட்டாயம் கூடுதல் சுமையைச் சேர்த்துள்ளது. குறிப்பாக மத்திய அரசின் செலவுகளைத் தாறுமாறாக அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் நாட்டின் ஹெல்த்கேர் சிஸ்டத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

 பட்ஜெட் அறிக்கை

பட்ஜெட் அறிக்கை

இதுமட்டும் அல்லாமல் மக்களின் முதலீட்டு, கொள்முதல், வேலைவாய்ப்புகளை இந்த 3வது அலை பெரு நகரங்கள் முதல் கிராமங்கள் வரையில் பாதித்துள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இந்தச் சூழ்நிலையில் சிறப்பான பட்ஜெட் அறிக்கை நாட்டின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவும்.

 நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தயாரிக்கும் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் 3 முக்கியமான விஷயத்தை முன்னிறுத்தி பட்ஜெட் அறிக்கையைத் தயாரிக்க வேண்டும்.

 முதல் முக்கியமான விஷயம்

முதல் முக்கியமான விஷயம்

நிர்மலா சீதாராமன் தயாரிக்கும் பட்ஜெட் அறிக்கையில் கொரோனா, ஒமிக்ரான் தொற்று மூலம் நேரடியாக மற்றும் மறைமுகமாகப் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கு உதவும் வகையில் கட்டாயம் நிவாரணம் வேண்டும். இந்த நிவாரணம் வரி தள்ளுபடி, மருத்துவச் செலவுகளுக்குச் சலுகை, வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் மக்களுக்கு நேரடியாக நிதியுதவி போன்ற அறிவிப்புகள் கட்டாயம் தேவை.

 இரண்டாவது முக்கியமான விஷயம்

இரண்டாவது முக்கியமான விஷயம்

பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சரிவை சீர்படுத்தும் வளர்ச்சி மற்றும் ஊக்குவிப்புத் திட்டங்கள் கட்டாயம் தேவை. இப்பிரிவில் மத்திய அரசுக்கு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான திட்டங்கள் பெரிய அளவில் கைகொடுக்கும், இதேபோல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பிரிவில் PLI திட்டம் உள்ளது.

ஆனால் உடனடியாக வர்த்தகம், வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் தான் தற்போது முக்கியத் தேவையாக உள்ளது. எனவே இதற்கான அறிவிப்புக் கட்டாயம் தேவை.

 

 மூன்றாவது முக்கியமான விஷயம்

மூன்றாவது முக்கியமான விஷயம்

இந்தியப் பருவகால மாற்றத்தை மிகவும் முக்கியமான விஷயமாக எடுத்துக்கொண்டு உள்ளது. குறிப்பாகப் பிரதமர் மோடி COP26 கூட்டத்தில் இந்தியாவின் நெட் ஜீரோ இலக்கை 2070ஆம் ஆண்டாக நிர்ணயம் செய்துள்ளது.

இந்நிலையில் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் கட்டாயம் பருவகால மாற்றம் குறித்த ஸ்மார்ட்டான திட்டம் கட்டாயம் முக்கியத்துவம் பெறும்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+