Budget 2022: கிரிப்டோகரன்சி முதலீட்டுக்கு 30% வரி.. முதலீட்டாளர்களுக்கு ஷாக்.. முழு விபரம்..!

மத்திய நிதியமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் நேரடி வரி விதிப்பு முறையில் பல முக்கியமான மாற்றங்களையும், திருத்தங்களையும் அறிவித்துள்ளார்.

Recommended Video

Bitcoin போன்ற Crypto Currency-க்கு Virtual Tax.. Union Budget 2022-ல் அறிவிப்பு

இது பலருக்குச் சாதகமாக இருந்தாலும், இந்தியாவில் இருக்கும் கோடிக்கணக்கான கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாகவே உள்ளது.

 கிரிப்டோகரன்சி மசோதா

கிரிப்டோகரன்சி மசோதா

மத்திய அரசு இன்னும் கிரிப்டோகரன்சி மசோதாவைத் தாக்கல் செய்யாத நிலையில், இன்று பட்ஜெட் அறிக்கையில் ரிசர்வ் வங்கி விரைவில் பிளாக்செயின் மற்றும் இதர தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் ரூப்பி அதாவது டிஜிட்டல் வடிவிலான இந்திய நாணயத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த டிஜிட்டல் நாணயத்தின் மூலம் இந்தியாவில் பணப்புழக்கத்தை எளிதாக நிர்வாகம் செய்ய முடியும்.

 30 சதவீதம் வரி

30 சதவீதம் வரி

மேலும் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் டிஜிட்டல் சொத்து முதலீட்டில் கிடைக்கும் அனைத்து வருமானத்திற்கும் அதிகப்படியாக 30 சதவீதம் வரி விதிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

 கிரிப்டோகரன்சி, NFT,

கிரிப்டோகரன்சி, NFT,

மேலும் டிஜிட்டல் சொத்துக்களான கிரிப்டோகரன்சி, NFT, போன்றவற்றை வாங்கும் போது எவ்விதமான வருமான வரி விதிப்பும் இல்லை. மேலும் கிரிப்டோ முதலீட்டில் ஏற்படும் நஷ்டத்தைப் பிற முதலீட்டு லாபத்தில் இருந்து குறைக்க முடியாது.

 வரிச் சுமை

வரிச் சுமை

இதன் மூலம் மத்திய அரசு கிரிப்டோ முதலீடுகளைத் தனியாகக் கணக்கிடுகிறது. இது முதலீட்டாளர்களுக்குப் பெரும் நெருக்கடியாகவே விளங்கும். மேலும் இந்த வரியை கிரிப்டோ வர்த்தகத் தளமே வசூலிக்கவும் முடியும் என்பது கூடுதல் தகவல்.

 கிரிப்டோகரன்சி கிப்ட்

கிரிப்டோகரன்சி கிப்ட்

மேலும் கிரிப்டோகரன்சியைப் பரிசாகக் கொடுத்தால், பரிசை பெரும் நபர் தான் வரி செலுத்த வேண்டும் என 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்புதிய வரியால் கிரிப்டோ முதலீட்டாளர்கள் எண்ணிக்கை படிப்படியாகக் குறையும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+