இந்திய மக்களுக்கு மிகப்பெரிய சுமையாக இருந்த எரிபொருள் விலை உயர்வை பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாகவே மத்திய அரசு குறைத்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யத் துவங்கியுள்ள நிலையில் சமையல் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு உள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர்
இன்று வெளியாகியுள்ள அறிவிப்பின் படி மத்திய அரசு கட்டுப்பாட்டிற்குக் கீழ் இயங்கி வரும் எரிபொருள் நிறுவனங்கள் 19 கிலோ வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைப் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 91.50 ரூபாய் வரையில் குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
வர்த்தகச் சிலிண்டர்
இதன் மூலம் ஹோட்டல் மற்றும் பல்வேறு வர்த்தக இடங்களில் பயன்படுத்தப்படும் வர்த்தகச் சிலிண்டர் விலை குறைய உள்ளது. இப்புதிய விலை குறைப்பின் படி டெல்லியில் 19 கிலோ எல்பிஜி சிலிண்டர் விலை 91.50 ரூபாய் குறைந்து 1,907 ரூபாயாக உள்ளது.
விமான எரிபொருள்
இதேவேலையில் விமான எரிபொருள் விலை 8.5 சதவீதம் வரையில் உயர்த்தப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. விமான எரிபொருளை அதிகம் விற்பனை செய்யும் இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் விலையை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
விமான டிக்கெட் விலை
இப்புதிய விலை உயர்வின் மூலம் ஒரு லிட்டர் விமான எரிபொருள் விலை 6,743 ரூபாய் அதிகரித்து 86,308.16 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் விரைவில் விமான டிக்கெட் விலையும் அதிகரிக்கப்படும்.
ஏர் இந்தியா
மத்திய அரசு ஏர் இந்தியாவை விற்பனை செய்த உடனேயே விமான எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது. விமான எரிபொருள் விலை உயர்வு இந்திய விமானப் போக்குவரத்துத் துறையைக் கடுமையாகப் பாதிக்கும்.


Click it and Unblock the Notifications