கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து இந்திய பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு சந்தை என அனைத்தும் மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில் ஒமிக்ரான் தொற்று பெரும் பாதிப்பை உருவாக்கி வருகிறது. ஒமிக்ரான் தொற்றால் பெரிய இழப்பு இல்லை என்றாலும் 2 கொரோனா அலை பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் வீணாகியுள்ளது தான் தற்போது முக்கியமான தலைவலியாக மாறியுள்ளது.
இந்த முக்கியமான காலக்கட்டத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கை எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்கத் தேவையில்லை.
பிப்ரவரி 1ஆம் தேதி
மத்திய அரசு திட்டமிட்டபடி பிப்ரவரி 1ஆம் தேதி காலை 11 மணிக்கு 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இந்தப் பட்ஜெட் அறிக்கையில் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான பல புதிய திட்டங்களும், நிதி ஒதுக்கீடும், பல சலுகைகளும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 4வது முறையாகப் பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார். 2019, 2020, 2021 ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து தற்போது 2022ல் 4வது முறையாகப் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார்.
பட்ஜெட் சூட்கேஸ்
பொதுவாகப் பட்ஜெட் அறிக்கை சூட்கேஸ்-ல் கொண்டு வரப்பட்டு நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்வார். 2019ல் முதல் முறையாகப் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது சூட்கேஸ்-ஐ நீக்கிவிட்டுச் சிவப்புத் துணியில் பட்ஜெட் அறிக்கையை கொண்டு வந்து தாக்கல் செய்தார், அதன் பின்பு இது சிவப்பு கவராக மாறியது.
டிஜிட்டல் பட்ஜெட் அறிக்கை
ஆனால் கடந்த ஆண்டுக் கொரோனா தொற்றுக் காரணமாகப் பட்ஜெட் அறிக்கை காகித வடிவில் வெளியிடப்படாமல் டிஜிட்டல் முறையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது இந்தியாவின் முதல் டிஜிட்டல் பட்ஜெட் அறிக்கையாக வரலாற்றுச் சிறப்புப் பெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டுப் பட்ஜெட் அறிக்கை எப்படித் தாக்கல் செய்யப்படும் என்பது இதுவரை வெளியிடப்படவில்லை.
அல்வா தயாரிப்பு நிகழ்ச்சி
இந்த ஆண்டுக்கான அல்வா தயாரிப்பு நிகழ்ச்சி விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒமிக்ரான் தொற்றுக் காரணமாகப் பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் இன்னும் முடிக்கப்படாத நிலையில் அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சியும் தாமதமாகியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி அல்வா தயாரிப்பு நிகழ்ச்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications