பட்ஜெட்தாக்கல் செய்ய இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பட்ஜெட் தாக்கல் குறித்து பலவிதமான எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றது. குறிப்பாக சம்பளதாரர்கள் மத்தியில் பல்வேறு விதமான எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன.
பல எதிர்பார்ப்புகள் நிலவி வரும் நிலையில் குறிப்பாக நிலையான வரிக்கழிவு விகிதத்தினை உயர்த்த வேண்டும். வருமான வரி வரம்புகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பதும் பல்வேறு தரப்பில் இருந்தும் மிக முக்கியமான கோரிக்கையாக இருந்து வருகின்றது.
குறிப்பாக 80சி, 80இஇ, 80 இஇஏ, 24பி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அளிக்கப்படும் வரம்புகளை அதிகரிக்க வேண்டும் என பல எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன.
விடுமுறை பயணப் படி
ஒவ்வொரு ஆண்டும் பணியாளர்களுக்கு விடுமுறை பயணப் படி (leave travel allowance), எல்டிசி (leave travel concession) சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதற்கு வரி சலுகையும் அளிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் ஓமிக்ரான் பரவி வரும் இந்த சூழலில் பணியாளர்கள் எங்கும் பயணிக்க முடியாத சூழல் இருந்து வருகின்றது. இதன் காரணமாக வரி செலுத்துவோருக்கு வழங்கப்படும் சலுகைகளை கோர முடியாத சூழல் இருந்து வருகின்றது.
வரிச் சலுகை
இந்த திட்டங்களுக்கு வருமான வரி சட்டம் 1961ன் படி, பிரிவு 10(5)ன் கீழ் ஊழியர்களுக்கு கிடைக்கும் எல் டி ஏ வருமானத்தின் ஒரு பகுதியாக கருதப்படாது. கடந்த அக்டோபர் 2020ல் எல்டிசி சலுகையை, மார்ச் 31, 2021 வரை செல்லும் என அறிவித்தது.
கன்டிசன்
இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்கள், பண்டிகை முன்பணமாக, வட்டியில்லாமல், 10 ஆயிரம் ரூபாயை பெறலாம். எல்.டி.சி., எனப்படும், விடுமுறை பயணப் படியை, 'கேஷ் வவுச்சர்' எனப்படும், பணக் கூப்பன்களாக பெறும் புதிய திட்டமும் அறிவிக்கப்பட்டது. எனினும் இதனை பெற கூடவே ஒரு நிபந்தனையையும் விதித்தது. அது ஜிஎஸ்டி விகிதம் 12% அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கும் பொருட்களுக்கு மட்டுமே செலவிட வேண்டும் என்று கூறியது.
வரிச்சலுகை எவ்வளவு?
ஊழியர் ஒருவருக்கு 36,000 ரூபாய் வரை எல்.டி.சி அனுமதி வழங்கப்படும். 4 பேர் கொண்ட குடும்பத்துக்கு ரூ.1,44,000 வரை எல்.டி.சி பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மொத்தம் ரூ.4,32,000 செலவிட்டால் ஊழியருக்கு சுமார் 60,000 ரூபாய்க்கும் மேல் வரை வரி சேமிப்பு கிடைக்கும்.ஆக இந்த வரி சலுகைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுமா? இது நுகர்வினை அதிகரிக்கப்படுவதோடு, பொருளாதாரத்தினையும் ஊக்குவிக்க பயன்படும்.


Click it and Unblock the Notifications