இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில், பெரியளவிலான அறிவிப்புகள் ஏதும் வரவில்லை எனலாம். குறிப்பாக சாமானிய மக்களுக்கு ஏற்ற அறிவிப்புகள் பெரிதாக எதுவும் வரவில்லை. இது பெரும் ஏமாற்றம் தரும் பட்ஜெட் ஆகவே வந்துள்ளது.
இதற்கிடையில் மாநில அரசு ஊழியர்களுக்கு பலன் தரும் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அது என்ன அறிவிப்பு. இதன் மூலம் ஊழியர்களுக்கு பயன் இருக்குமா? உண்மை நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
மாநில அரசு ஊழியர்களுக்கு சலுகை
மாநில அரசு ஊழியர்களின் என்பிஎஸ் கணக்கில் நிறுவனங்கள் செலுத்தும் பங்கின் மீதான வரி விலக்கு வரம்பை 14% ஆக உயர்த்துவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது முன்னதாக 10% ஆக இருந்து வந்தது.
இந்த வரி விலக்கு சலுகையினை 2022- 23ம் ஆண்டில் இருந்து மாநில அரசு ஊழியர்கள் பெற்று கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள்
தற்போதைய நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இந்த சலுகையானது கிடைத்து வருகின்றது. ஆக இந்த தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 14% வரி சலுகையினை பெற்று வருகின்றனர். இது மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு சமமாக கிடைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் கூறியுள்ளார். ஆக இந்த அறிவிப்பின் படி, இனி மத்திய மாநில அரசு ஊழியர்கள் என இருவருக்குமே இந்த சலுகை பொருந்தும்.
தனியார் ஊழியர்கள் உண்டா?
இதில் தனியார் துறை ஊழியர்களுக்கு 10% மட்டுமே வரி விலக்கு வரம்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்த திட்டத்தில் மூன்று விதமான வரிச்சலுகைகள் கிடைக்கிறது. பிரிவு 80C, வருமான வரி சட்டப்பிரிவு 80CCD ஆகியவற்றின் கீழ் 2 லட்சம் ரூபாய் வரையில் வரி சலுகை உண்டு. இதில் 80Cன் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரையிலும், 80CCD (1b)ம் கீழ் 50,000 ரூபாய் வரையிலும் வரிச்சலுகை கிடைக்கிறது. எனினும் இந்த சலுகையானது தனி நபர் ஒருவர் இருந்தால் மட்டுமே கிடைக்கும். அதோடு 80CCDம் கீழ் 50,000 ரூபாய் கிடைக்கும் வரிச்சலுகையானது டயர் 1 கணக்கில் முதலீடு செய்வதன் மூலம் பெற முடியும்.
எப்போது வரி செலுத்தணும்?
2 லட்சம் ரூபாய் வரம்புக்கு மேல் நிறுவனத்தின் எந்தவொரு பங்களிப்பும் வருமான வரி சட்டப்பிரிவு 80CCD (2)இன் கீழ் விலக்கு பெற தகுதியுடையது தான்.
ஒரு நிதியாண்டில் ஒரு ஊழியரின் NPS, superannuation பண்ட் மற்றும் EPF திட்டங்களுக்குச் செலுத்தப்படும் தொகை ஒரு வருடத்திற்கு 7.5 லட்சம் ரூபாயினை தாண்டினால் வரி செலுத்த வேண்டியிருக்கும்.


Click it and Unblock the Notifications